(783)

(783)

குரக்கினப்ப டைகொடுகு ரைகடலின் மீதுபோய்

அரக்கரங்க ரங்கவெஞ்ச ரந்துரந்த வாதிநீ

இரக்கமண்கொ டுத்தவற்கி ரக்கமொன்று மின்றியே

பரக்கவைத்த ளந்துகொண்ட பற்பபாத னல்லையே.

பதவுரை

குரங்கு இனம் படைகொடு

வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய்

கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு

அவ்விலங்கையிலுள்ள
அரக்கர்

ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க

அழியும்படி
வெம் சரம்

தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த

அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி

வீரர்களில் தலைவன்
நீ

(எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க

நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு

உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க

குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே

ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து

(திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட

(மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே

தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- யாசகவேஷத்தைப் பூண்டுகொண்டு சென்று யாசிப்பதும், பிறகு யாசகங் கொடுத்தவனுக்குக் குடியிருக்க ஒரு அடிநிலமும் மிகாதபடி ஸர்வஸ்வாபஹாரம் பண்ணுவதும் உனக்குத்தான் ஏற்றிருக்குமென்கிறார் போலும்.

“இரக்கமொன்று மின்றியே” என்றே பெரும்பாலும் பாடம் வழங்கும்; பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்த வியாக்கியானத்தில் “பூமியில் அவனுக்கு ஒரு பதயாஸமும் சேஷியாதபடி” என்றருளிச் செய்திருந்தலால் “இருக்க ஒன்றுமின்றியே” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று பெரியோர் கூறுவர். “இரக்கமொன்றுமின்றியே” என்ற பாடத்திலும் வியாக்கியான வாக்கியத்தைப் பொருந்தவிடலாமென்பர். இதில் ஆக்ரஹமுடையோமல்லோம் (ங.உ)

English Translation

You took the monkey-army over foaming sea to battle-field, Lord you fought with arrows and you put the Rakshasas to fight. You sought a gift of land and then you mercilessly took the Earth. O Lord of lotus feet, you grew and straddled over all the worlds.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top