(784)
மின்னிறத்தெ யிற்றரக்கன் வீழவெஞ்ச ரம்துரந்து
பின்னவற்க ருள்புரிந்த ரசளித்த பெற்றியோய்
நன்னிறத்தொ ரிஞ்சொலேழை பின்னைகேள்வ மன்னுசீர்
பொன்னிறத்த வண்ணனாய புண்டரீக னல்லையே.
பதவுரை
மின் நிறத்து எயிறு அரக்கன் |
– |
மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன் |
வீழ |
– |
மாளும்படி |
வெம் சரம் |
– |
கொடிய அம்புகளை |
துரந்து |
– |
அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி) |
பின்னவற்கு |
– |
அவனது தம்பியான விபீடணனுக்கு |
அருள் புரிந்து |
– |
க்ருபை செய்தருளி |
அரசு அளித்த |
– |
பட்டாபிஷேகம் செய்து வைத்த |
பெற்றியோய்! |
– |
பெருமானே! |
நல் சிறத்து |
– |
நல்ல நிறத்தையுடையவளாய் |
ஓர் இன் சொல் |
– |
ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய் |
ஏழை |
– |
உன்பக்கல் சாபல்யமுடையவளான |
பின்னை |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு |
கேள்வி |
– |
நாயகனானவனே! |
மன்னு சீர் |
– |
நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய் |
பொன் நிறந்த வண்ணன் ஆய |
– |
பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான |
புண்டரீகன் அல்லையே |
– |
புண்டரீகாக்ஷனென்பவன் நீயே கான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இராவணனைக் கொன்றொழித்து ஸ்ரீவிபீஷணாழ்வானை இலங்கையரசனாக்கி அருள்புரிந்தவாற்றைச் சொல்லிப் புகழ்கிறார் முன்னடிகளில். இராவணன் பார்க்கும்போதே பயங்கரமான வடிவுடையவன் என்பது தோன்ற மின்னிறத்தெயிற்றரக்கன் என்கிறார். வீழ – விழ என்பதன் நீட்டல். பின்னவன் – தம்பி. வெற்றி – பெருமை.
English Translation
The demon-king with flashing teeth, –you felled him with your dart and bow, then gave the kingdom to his own, the younger kin benevolent. The fair and lovely Pinnai Dame is pride to you, she’s soft of speech. O Lord with lasting radiance and hue of lotus everywhere!