(785)

(785)

ஆதியாதி யாதிநீயொ ரண்டமாதி யாதலால்

சோதியாத சோதிநீஅ துண்மையில்வி ளங்கினாய்

வேதமாகி வேள்வியாகி விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி யாயனாய மாயமென்ன மாயமே.

பதவுரை

ஆதி ஆதி ஆதி நீ

மூன்று விதமான காரணமும் நீயே யாகிறாய்:
ஒரு அண்டம் ஆதி

அண்டத்துக்குட்பட்ட  ஸகல பதார்த்தங்களுக்கும் நிர்வாஹகனுமாகிறாய்;
ஆதலால்

இப்படியிருக்கையாலே
சோதியாத சோதி நீ

பரீக்ஷிக்கவேண்டாத பரம்பொருள் நீ நீயேயாகிறாய்;
அது உண்மையில்

அந்த சோதியானது ப்ரமாணஸித்தாமகையாலே
விளங்கினாய்

(வேறொன்றாலன்றிக்கே) தானாகவே நீ விளங்குகின்றாய்;
வேதம் ஆகி

வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி

யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய்

உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி

இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம்

இடையனாய்ப் பிறந்தாமயம்
என்ன மாயம்

என்ன ஆச்சரியமோதான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் ஒரு காரியம் பிறக்கவேணுமானால் அதற்கு மூன்று வகையான காரணங்கள் உண்டு: உபாதாநகாரணம், ஸஹகாரிகாரணம் , நிமித்தகாரணம். குடம் என்கிற ஒரு காரியம் பிறக்க வேண்டுமிடத்து மணல் உபாதான காரணமென்றும், சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரிகாரணமென்றும், குயவன் காலம் அத்ருஷ்டம் முதலியவை நிமித்த காரணமென்றும் கொள்ளப்படும்; அப்படியே ஜகத்தாகிற காரியத்துக்கு மூவகைக் காரணங்கள் அமையவேண்டுமே. அவற்றில் எம்பெருமான் எவ்வகைக் காரணமாகிறானென்றால், மூவகைக் காரணமும் இவனொருவனே யென்கின்றார் ஆதியாதியாதிநீ என்று. ஆதி என்றது காரணம் என்றபடி. ஆதிசப்தத்தை மூன்று தடவைப் பிரயோகித்ததனால் மூவகைக் காரணமும் நீயே என்றதாகிறது.

ஓரண்டமாதி = அண்டமென்றது ஜாத்யேக வசநமாகக் கொள்ளத்தக்கது. அண்டராசிகளை ஸ்ருஷ்டித்து அவற்றுள் பிரமன் முதல் எறும்பளவான ஸகல பதார்த்தங்களையும்ஸ்ருஷ்டித்து அவற்றுக்கு அந்தர்யாமியாயிருக்கிறாய் என்றபடி. இவ்விடத்தில் ஆதி என்றது- ஆகின்றாய் என்னும் பொருளையுடையதான நிகழ்கால முன்னிலை யொருமைவினைமுற்று. ஆ- பகுதி;  தி- விகுதி.

ஆதலால் சோதியாத சோதி நீ = கார்யவர்க்கங்களிலே ஒருவனாயிருந்தால் நீ பரஞ்சோதியா அன்றா என்று சோதித்துப் பார்க்க வேண்டியதாகும்; அப்படியன்றியே ஸகலஜகத்காரணபூதனாக அமைந்தயாகையினால் ஜ்யோதிச்சப்த வாச்யன் நீதான் என்று எளிதாக நிர்ணயிக்கலாயிராநின்றது என்படி. ஜகத்காரணபூதமான பொருள் எதுவோ அதுதான் உபாஸிக்கத் தகுந்ததென்றும் அதுதான் பருங்சோதியென்றும் தோந்தங்களிற் கூறப்பட்டிருத்தலால் உன்னைப் பற்றி சோதிக்க வேண்டிய வருத்தமில்லையென்கிறார். “***- என்றது காண்க.

English Translation

The Cause-of causes Lord above, you became the earth and all. The light-of light revealed in all the Vedas of the truthful word! You became the Vedic Earth and Vedic Sacrifice above. Then you became the cowherd-Lord, the wonder-child of Gokulam!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top