(774)

(774)

வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெ யிற்றவன்

ஊன்நிறத்துகிர்த்தலம ழுத்தினாய் உலாயசீர்

நால்நிறத்த வேதநாவர் நல்லயோகி னால்வணங்கு

பால்நிறக்க டல்கிடந்த பற்பநாப னல்லையே.

பதவுரை

வால் திறந்து

வெளுத்த நிறத்தையுடைய
ஓர் சீயம் ஆய்

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாயவதரித்து
வளைந்த வாள் வயிற்றினன்

வளைந்தும் ஒளிபெற்றுமிருக்கிற பற்களையுடையனான இரணியனுடைய
ஊன் நிறத்து

சரீரத்தில் மர்ம ஸ்தானத்திலே
உதிர் தலம் அழுத்தினாய்

கை நகங்களை அழுத்தினவனே!
உலாய சீர்

உலகமெங்கும் உலாவுகின்ற சீர்மையையுடைய
கால் நிறத்த வேதம்

உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம்,ப்ரசயம் எனகிற நால்வகை ஸ்வரங்களையுடைய வேதங்களை
நாவர்

நாவிலே உடையவர்கள் (ச்ரோத்ரியர்கள்)
நல்ல யோதினால்

விலக்ஷணமான உபாயத்தினாலே
வணங்கு

வணங்குவதற்கு இடமான
பால்நிறக் கடல்

திருப்பாற் கடலிலே
கிடந்த

பள்ளிகொண்டருளின
பற்பநரபன் அல்லையே

பத்மநாபன் நீயேயன்றோ

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரளயகாலத்து ஆபத்தைப்போக்கி வடதளசாயியாக அமைந்தது மிகவும் அற்புதமான செயல் என்று அதிலே ஈடுபட்டுப் பேசினார் கீழ்ப்பாட்டில். இது அகடிதகட நாஸாமர்த்தியமானது நரசிங்கவுருவங்கொண்ட ஸாமர்த்தியத்தின் முன்னே ஒரு பொருளாக மதிக்கத்தக்கதோ?  ******  என்கிறபடியே சரீரத்தில் ஏகதேசத்தை மநுஷ்ய ஸஜாதீயமாக்கியம் ஏகதேசத்தைத் திர்யக் ஸஜுதியமாக்கியும் இப்படி இரண்டு ஜாதியை ஏகவிக்ரஹமாக்கித் துணிலேவந்து தோன்றிய வித்தகம் ஸாமாந்யமானதோ? இதனைப் பரிசோதிக்க வல்லார்? என்கிறார் இப்பாட்டில்.

வால் நிறத்தோர் சீயமாய் = புருஷோத்தமன் தன்ஸ்ரூபத்தை அழித்து ஸிம்ஹஸஜா தீயனது போலவே காளமேகம்போன்ற தன்நிறத்தையும் மாற்ற வெண்ணிறத்தை ஏறிட்டுக்கொள்வதே! என்று ஈடுபடுகிறார். வால் வெண்மை. இனி, வான் நிறம்” எனப் பிரித்து, திவ்யமான தன்மையையுடைய என்று பொருள் கொள்ளுதலும் நன்றே. சீயம் = சிங்கம். “வளைந்தவா ளெயிற்றவன்” என்றதனால் இரணியனுடைய பயங்கரமான வடிவுடைமை தோன்றும். ஊன்நிறம்- சரீரத்தின் மர்மஸ்தாநம்- ஹ்ருதயமென்க. உகிர்த்தலம் என்ற விடத்து, “தலம்” என்றது வார்த்தைப்பாடு. ‘உலாய” என்றது ‘உலாவிய’ என்றபடி. (உங)

English Translation

O Lord who took the form of white lion and caught the wicked king, and tore his chest with claws alone, that the entire world did rave about! O Lord who wins the praise of all and worship of the Vedic seers! O Lord with lotus in the navel, O sleeping-the-Milky-Deep!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top