(779)

(779)

படைத்தபாரி டந்தளந்த துண்டுமிழ்ந்து பெளவநீர்

படைத்தடைத்த திற்கிடந்து முன்கடைந்த பெற்றியோய்

மிடைத்தமாலி மாலிமான்வி லங்குகால னூர்புக

படைக்கலம் விடுத்தபல்ப டைத்தடக்கை மாயனே.


பதவுரை

பௌவம் நீர்

–

(அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து

–

ஸ்ருஷ்டித்து
படைத்த

–

(பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார்

–

பூமியை
இடந்து

–

(ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து
அளந்து

–

(த்ரிவிக்ரமனாய்) அளந்து
உண்டு

–

(ப்ரளயகாலத்தில்) திருவயிற்றில் வைத்து நோக்கி
உமிழ்ந்து

–

(ப்ரளயங்கழிந்த பின்பு) வெளிப்படுத்தியும்.
பௌவம் நீர்

–

(இலங்கைக்கு அழகான) கடலை
அடைத்து

–

ஸேதுகட்டித் தூர்த்து.
முன் அதில் கிடந்து

–

முன்பொருகால் அக்கடலிற் கண்வளர்ந்தருளி
கடைந்த

–

(ஒருகால் அமுதமெடுப்பதற்காக அதனைக்) கடைந்தருளின
பெற்றிபோய்!

–

(இப்படிப்பட்ட அளவற்ற பெருமைகளையுடையவனே!
மிடைத்த

–

செருக்கி வந்த
மாலி

–

மாலி என்றகிற ராக்ஷஸனென்ன
விலங்கு மான் மாலி

–

அதிக்ஷுத்ரனான ஸுமாலியென்னும் ராக்ஷஸனென்ன இவர்கள்
காலன் ஊர் புக

–

யமலோகம் போய்ச் சேரும்படியாக
படைக்கலம் விடுத்த

–

ஆயுதங்களை ப்ரயோகித்தருளின
பல் படை தடகை மாயனே!

–

பலவகைப்பட்ட திவ்யாயுதங்களை விசாலமான திருக்கையிலே  யுடையனான பெருமானே! (உன்னையார் மதிக்கவல்லர்? என்று கீழ்ப்பாட்டின் க்ரியைக் கூட்டிக்கொள்வது)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது. ‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம். அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம். அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம். விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க. இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம்.  (உஅ)

English Translation

You made the Earth; you lifted it, then ate and brought it out again. You made the ocean churned the ocean, lay on it, and made a bridge. You made the angry Mali and Sumali go to Hell below, O Lord with arms of strength and build that wield the mighty five weapons!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top