(775)

(775)

கங்கைநீர்ப யந்தபாத பங்கயத்தெம் மண்ணலே

அங்கையாழி சங்குதண்டு வில்லும்வாளு மேந்தினாய்

சிங்கமாய தேவதேவ தேனுலாவு மென்மலர்

மங்கைமன்னி வாழுமார்ப ஆழிமேனி மாயனே.

பதவுரை

கங்கை நீர்

–

கங்கா தீர்த்தத்தை
பயந்த

–

உண்டாக்கின
பாத பங்கயத்து எம் அண்ணலே

–

தீருவடித் தாமரையையுடைய எம்பெருமானே!
அம் கை

–

அழகிய திருக்கையிலே
ஆழி சங்கு தண்டும் வில்லும் வாளும்

–

பஞ்சாயுதாழ்வாரக்ளை
ஏந்தினாய் !

–

ஏந்திக் கொண்டிருப்பவனே!
சிங்கம் ஆய

–

நரஸிம்ம மூர்த்தியாயவதரித்த
தேவ தேவ!

–

தேவாதி தேவனே;
தென் உலாவும் மெல்மலர் மங்கை

–

தேன் பொருந்திய ஸுகுமாரமான தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டி
மன்னிவாழும் மார்ப

–

(அப்பூவை விட்டு வந்து) பொருந்தி வாழும்படியான திருமார்பையுடையவனே!
ஆழி மேனி

–

கடல் போன்ற திருமேனியையுடைய
மாயனே

–

ஆச்சர்ய பூதனே! (என்று ஈடுபடுகிறார்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஹங்காரிகளில் தலைவனான ருத்ரனுக்கும் ஸ்ரீபாத தீர்த்தத்தை தந்தருளி அவனைப் பாவனஞ் செய்தருளினவனன்றோ நீ; ****** என்றபடி- இடர்ப்பட்டு வரும் அடியார்களைத் துயர்நீக்கி ரக்ஷிப்பதில் காலதாமதம் நேரிடாமைக்காகப் பஞ்சாயுதாழ்வார்களை எப்போதும் திருக்கையிலே எந்திக் கொண்டிருப்பவனன்றோ நீ: அந்த ஆச்ரிதரக்ஷண சீக்ஷையை இருஸமய விசேஷத்திலே நரசிங்கமாய்த் தோன்றி வெளியிட்டவனன்றோ நீ; இப்படிப்பட்ட குணங்களுக்குத் தோற்றுப் பெரிய பிராட்டியார் உன்னை விடமாட்டாதே எப்போதும் மார்பில் மன்னியிருக்கின்றா என்றோ; கருங்கடலைக் கண்டவாறே கண்களுங் குளிர்ந்து கைல தாபங்களும் ஆறவதுபோல உன் திருமேனியை ஸேவித்தவாறே என் கண்கள் குளிர்ந்த தாபத்ரயமும் ஆறம்படியா யிராநின்றதே! என்று ஈடுபடுகிறார்.   (உச)

English Translation

O my Lord with lotus feet, the origin of the Ganga-ji! The mace and conch and dagger and the bow and discus are your Five. O Lord of gods, you came as mighty lion to save the wicked’s son. The lotus dame with bees around does live forever on your chest!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top