இராமாநுச நூற்றந்தாதி திருமொழி – 9

(2879)

போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ்தெரிந்து

சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்

ஏற்றமென் றேகொண் டிருக்கிலுமென் மனம்ஏத்தி யன்றி

ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.

விளக்க உரை

(2880)

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே

எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.

விளக்க உரை

(2881)

மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்

இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்

அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே.

விளக்க உரை

(2882)

புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்

கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீபுகுந்தென்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே.

விளக்க உரை

(2883)

கட்டப் பொருளை மறைப்பொரு ளென்று கயவர்சொல்லும்

பெட்டைக் கெடுக்கும் பிரனல்லனே,என் பெருவினையைக்

கிட்டிக் கிழங்கொடு தன்னருள் என்னுமொள் வாளுருவி

வெட்டிக் கிளைந்த இராமா னுசனென்னும் மெய்த்தவனே.

விளக்க உரை

(2884)

தவந்தரும் செல்வம் தகவும் தரும்,சரியாப்பிறவிப்

பவந்தரும் தீவினை பாற்றித் தரும்,பரந்தாமமென்னும்

திவந்தரும் தீதில் இராமானுசன் தன்னைச் சார்ந்தவர்கட்

குவந்தருந்தேன், அவன் சீரன்றி யானென்றும் உள்மகிழ்ந்தே.

விளக்க உரை

(2885)

உண்ணின் றுயிர்களுக் குற்றன வேசெய்து அவர்க்குயவே

பண்ணும் பரனும் பரிவில னாம்படி பல்லுயிர்க்கும்

விண்ணின் தலைநின்று வீடளிப் பானெம் இராமானுசன்

மண்ணின் தலத்துதித்து உய்மறை நாலும் வளர்த்தனனே.

விளக்க உரை

(2886)

வளரும் பிணிகொண்ட வல்வினையால்,மிக்க நல்வினையில்

கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்

தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்

குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே.

விளக்க உரை

(2887)

தன்னையுற்றாட்செய்யும் தன்மையினோர்,மன்னு தாமரைத்தாள்

தன்னையுற் றாட்செய்ய என்னையுற் றானின்று தன்தகவால்

தன்னையுற்  றாரன்றித் தன்மையுற் றாரில்லை என்றறிந்து

தன்னையுற் றாரை இராமா னுசன்குணம் சாற்றிடுமே.

விளக்க உரை

(2888)

இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்

சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்

நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தே

விடுமே சரணமென் றால், மனமே! நையல் மேவுதற்கே?

விளக்க உரை

(2889)

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top