(2879)

(2879)

போற்றருஞ் சீலத் திராமானுச,நின் புகழ்தெரிந்து

சாற்றுவ னேலது தாழ்வது தீரில்,உன் சீர்தனக்கோர்

ஏற்றமென் றேகொண் டிருக்கிலுமென் மனம்ஏத்தி யன்றி

ஆற்றகில்லாது, இதற் கென்னினை வாயென்றிட் டஞ்சுவனே.

 

பதவுரை

போற்ற அரு சீலத்து

புகழ்ந்து தலைக்கட்டமுடியாத சீல குணத்தையுடைய

இராமாநுச

எம்பெருமானாரே;

நின் புகழ்

தேவரீருடைய திருக்குணங்களை

தெரிந்துசாற்றுவனேல்

உணர்ந்து பேசுவேனாகில்

அது

(நீசனாகிய நான் ) பேசுகிறவது

தாழ்வு

(தேவரீருக்கு) அவத்யமாம்;

அது தீரில்

அப்படி நான் பேசுவது தவிர்த்தல்

உன் சீர் தனக்கு ஒர் ஏற்றம்

தேவரீருடைய திருக்குணங்களுக்கு மேன்மையாகும்

என்றே கொண்டு இருக்கிலும்

என்று நான் தெரிந்து கொண்டிருந்தாலும்

என் மனம்

எனது நெஞ்சானது

எத்தி அன்றி

(தேவரீருடைய திருக்குணங்களைப்) புகழ்ந்தல்லது

ஆற்ற கில்லாது

தரித்திருக்க மாட்டாது;

இதற்கு

இவ்விஷயத்திலே

என் நினைவாய் என்றிட்டு அஞ்சுவன்

தேவரீர் என்ன நினைக்குமோ வென்று பயப்படுகிறேன்.

 

English Translation

O Ramanuja of glory beyond praise! If I praise you thinking I know your great merit, it is mean praise. If I give up, saying it is beyond me, that indeed is fair praise, knowing this, my heart still does not satiate praising you, I fear what you may think of me.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top