(2880)

(2880)

நினையார் பிறவியை நீக்கும் பிரானை,இந் நீணிலத்தே

எனையாள வந்த இராமா னுசனை இருங்கவிகள்

புனையார் புனையும் பெரியவர் தாள்களில் பூந்தொடையல்

வனையார் பிறப்பில் வருந்துவர் மாந்தர் மருள்சுரந்தே.

 

பதவுரை

பிறவியை நீக்கும் பிரானை

ஸம்ஸாரத்தை யொழிக்கும் உபகாரகராயும்

இ நீள் நிலத்தே

இப்பெரிய பூமியிலே

எனை ஆள

என்னை அடிமை கொள்வதற்கே

வந்த

அவதரித்தவராயுமுள்ள

இராமாநுசனை

எம்பெருமானாரை

நினையார்

சிந்தியா தவர்களாயும்,

இரு கவிகள் புனையார்

(அவர் விஷயமாக) நல்ல பாடல்களையும் பாடாதவர்களாயும்

புனையும் பெரியவர் தாள்களில்

(ஏதோ பாக்கியத்தாலே) பாடல்களைப்படுகிற மஹான்களின் திருவடிகளில்

பூ தொடையல்வனை யார்

புஷ்ப மாலைகளை ஸமர்ப்பியாதவர்சளாயுமுள்ள

மாந்தர்

மனிசர்கள்

மருள் சுரந்து

அஜ்ஞானம் அதிகமாகப் பெற்று

பிறப்பில் வருந்துவர்

ஸம்ஸாரத்ததிற் கிடந்து துன்பப்படுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் அஞ்சுவனே என்ற விவருடைய அச்சம் தீரும்படி குளிரக் கடாக்ஷித்தார் எம்பெருமானார்; அந்தக் கடாக்ஷ வைபவத்தாலே அச்சம் தீரப்பெற்றுத் தேறுதலடைந்து, மநோவாக்காயங்களில் ஏதேனாமொன்றால் எம்பெருமான்றால் எம்பெருமானார் விஷயத்தில் ஒரு நன்மை செய்து வாழ்ந்து போகலாமாயிருக்க, பாவிகள் அதுசெய்யாதே பாழாய்ப்போகிறார்களே! என அநுதபிக்கிறார் இதில்.

 

English Translation

Ramanuja came to rule me, and rid me of my birth. Those who do not think of him, or sing his praise in song or worship the feet of those who sing of him, are carriers of darkness, who will suffer more births on Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top