(2878)

(2878)

கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்

ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்

வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்

புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.

 

பதவுரை

கலி மிக்க

நிலவளம் மிகுந்த

செந்நெல் கழனி

செந்நெல்கழனிகளை யுடைய

குறையல்

திருக்குறையலூரில் அவதரித்தவராய்

கலை பெருமான்

சாஸ்த்ர மென்னும்படியான திவ்யப்ரபந்தகளையருளிச் செய்த் திரு மங்கையாழ்வாருடைய

மிக்க ஒலி பாடலை

அதிசயித்த இசையையுடைய பெரிய திருமொழியை

உண்டு

அநுபவித்து

தன் உள்ளம் தடித்து

தமது திருவுள்ளம்

அதனால் வலி மிக்கம்

அத்தால் மிடுக்குஅதிகரித்த

சீயம்

சிங்கம் போன்ற

இராமாநுசன்

எம்பெருமானார்,

மறை வசதியர் ஆம் புலி மிக்கது என்று இப்புவனத்தில் வந்தமை

வேதத்தில் துர்வாதங்கள் பண்ணுகிற குத்ருஷ்டிகளாகிற புலிகள் அதிகமாய் விட்டன வென்று (அவற்றைத் தண்டிப்பதற்காக ) இவ்வுலகில் அவதரித்த படியை

போற்றுவன்

புகழ்ந்திடக் கடவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கலிமிக்க செந்நெற்கழனி = கலியாவது ஆரவாரம்; உழுவது நடுவது அறுப்பதாய்ச் செல்லுகிற கோலாஹலம்.

 

English Translation

When the tigers of heretic thoughts roamed everywhere freely, Ramanuja came as a lion unto them, strengthened of heart by the Pann-based songs of fertile Kuraiyalur’s king kalikanri. I bow to him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top