(2882)

(2882)

புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்

நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்

கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீபுகுந்தென்

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே.

 

பதவுரை

செம்மை நூல் புலவர்க்கு

நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவிசொல்லவல்லவர்களுக்கும்

எண்ண அரு கீர்த்தி இராமாநுச

அளவிட முடியாத கீர்த்தியையுடைய

இராமாநுச

எம்பெருமானாரே!,

புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன்

புண்ணியமான ஒருவிராதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை;

அடி போற்றி செய்யும்

தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான

நுண் அரு கேள்வி

ஸுக்ஷ்மமாய் அருமையான சரவணத்தை

நுவன்றும் இலேன் இன்று

(செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும்

என்

இன்று

கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும்

அடியேனது கண்ணினாள்ளேயும் நெஞ்சினாள்ளேயும்

புகுந்து நின்ற இக்காரணம் கட்டுரை

புகந்து எழுந்தருளியிருப்பதற்குக் காரணமருளிச்செய்யவேணும்.

 

English Translation

O Ramanuja with abiding glory that even the learned ones cannot comprehend I have not performed any sacred penances to learn by realisation.  Nor have I served your feet and learnt from you by the method of questioning. And yet you have entered my heart and remain in my eyes.  Pray tell me, for what purpose?

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top