(2882)
புண்ணிய நோன்பு புரிந்துமி லேன்,அடி போற்றிசெய்யும்
நுண்ணருங் கேள்வி நுவன்றுமி லேன்,செம்மை நூற்புலவர்க்
கெண்ணருங் கீர்த்தி இராமா னுச! இன்று நீபுகுந்தென்
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் நின்றவிக் காரணம் கட்டுரையே.
பதவுரை
|
செம்மை நூல் புலவர்க்கு |
– |
நல்ல சாஸ்த்ரங்களைக் கற்றுக் கவிசொல்லவல்லவர்களுக்கும் |
|
எண்ண அரு கீர்த்தி இராமாநுச |
– |
அளவிட முடியாத கீர்த்தியையுடைய |
|
இராமாநுச |
– |
எம்பெருமானாரே!, |
|
புண்ணியம் நோன்பு புரிந்தும் இலேன் |
– |
புண்ணியமான ஒருவிராதத்தையும் அடியேன் அநுஷ்டிக்க வில்லை; |
|
அடி போற்றி செய்யும் |
– |
தேவரீருடைய திருவடிகளை வாழ்த்துகைக்கு உறுப்பான |
|
நுண் அரு கேள்வி |
– |
ஸுக்ஷ்மமாய் அருமையான சரவணத்தை |
|
நுவன்றும் இலேன் இன்று |
– |
(செய்யவேணு மென்று வாயாலே) சொல்லவுமில்லை (அப்படியிருந்தும் |
|
என் |
– |
இன்று |
|
கண்ணுள்ளும் நெஞ்சுள்ளும் |
– |
அடியேனது கண்ணினாள்ளேயும் நெஞ்சினாள்ளேயும் |
|
புகுந்து நின்ற இக்காரணம் கட்டுரை |
– |
புகந்து எழுந்தருளியிருப்பதற்குக் காரணமருளிச்செய்யவேணும். |
English Translation
O Ramanuja with abiding glory that even the learned ones cannot comprehend I have not performed any sacred penances to learn by realisation. Nor have I served your feet and learnt from you by the method of questioning. And yet you have entered my heart and remain in my eyes. Pray tell me, for what purpose?
