(2889)

(2889)

தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்

சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்

நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே

பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே.

 

பதவுரை

தற்கம் சமணரும்

தர்க்கம் பண்ணுகிற சமணர்களும்

பேய்

பேய்போலே பிடித்தபிடி விடாதேநிற்கிற

சாக்கியர்களும்

பௌத்தர்களும்

தாழ் சடையோன் சொல்கற்ற சோம்பரும்

ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமாத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும்

சூனிய வாதரும்

சூந்நியவாதிகளும்

நால் மறையும் நிற்க

நான்கு வேதங்களும் விளங்கிக்கொண்டி ருக்கச்செய்தே

குறும்பு செய் நீசரும்

(அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும்

மாண்டனர்

ஒழிந்தார்கள்;

(எப்போது ? என்றால்)

பொன் கற்பகம் எம் இராமாநுச முனி

சிறந்த கல்பவ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார்

நீள் நிலத்தே போந்த பின்

விசாலமான இப்பூமியிலே திருவவதரித்த பின்பு.

 

English Translation

After our golden Kalpaka wishing tree, our Ramanuja Muni was born, the polemic Sramanas, the soleless sakhyas, they lazy nihilists of Siva-agamas, the wrong interpreters among Vedantins, all have been vanquished from the Earth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top