(2889)
தற்கச் சமணரும் சாக்கியப் பேய்களும் தாழ்சடையோன்
சொற்கற்ற சோம்பரும் சூனிய வாதரும் நான்மறையும்
நிற்கக் குறும்புசெய் நீசரும் மாண்டனர் நீணிலத்தே
பொற்கற் பகம், எம் இராமா னுசமுனி போந்தபின்னே.
பதவுரை
|
தற்கம் சமணரும் |
– |
தர்க்கம் பண்ணுகிற சமணர்களும் |
|
பேய் |
– |
பேய்போலே பிடித்தபிடி விடாதேநிற்கிற |
|
சாக்கியர்களும் |
– |
பௌத்தர்களும் |
|
தாழ் சடையோன் சொல்கற்ற சோம்பரும் |
– |
ருத்ரனாடைய சொல்லாகிய சைவாகமாத்தைக் கற்ற தாமஸர்களான சைவர்களும் |
|
சூனிய வாதரும் |
– |
சூந்நியவாதிகளும் |
|
நால் மறையும் நிற்க |
– |
நான்கு வேதங்களும் விளங்கிக்கொண்டி ருக்கச்செய்தே |
|
குறும்பு செய் நீசரும் |
– |
(அவற்றுக்குச் சேராத) அபார்த்தங்களைப் பண்ணுகிற குத்ருஷ்டிகளும் |
|
மாண்டனர் |
– |
ஒழிந்தார்கள்; |
|
(எப்போது ? என்றால்) |
||
|
பொன் கற்பகம் எம் இராமாநுச முனி |
– |
சிறந்த கல்பவ்ருக்ஷம் போலே உதாரான ஸ்வாமி எம்பெருமானார் |
|
நீள் நிலத்தே போந்த பின் |
– |
விசாலமான இப்பூமியிலே திருவவதரித்த பின்பு. |
English Translation
After our golden Kalpaka wishing tree, our Ramanuja Muni was born, the polemic Sramanas, the soleless sakhyas, they lazy nihilists of Siva-agamas, the wrong interpreters among Vedantins, all have been vanquished from the Earth.
