(2890)

(2890)

போந்ததென் னெஞ்சென்னும் பொன்வண்டு உனதடிப் போதில் ஒண்சீர்

ஆம்தெளி தேனுண் டமர்ந்திட வேண்டி,நின் பாலதுவே

ஈந்திட வேண்டும் இராமா னுச! இது அன்றி யொன்றும்

மாந்தகில் லாது, இனி மற்றொன்று காட்டி மயக்கிடலே.

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!

என் நெஞ்சு என்னும் பொன் வண்டு

எனது நெஞ்சாகிற அழகிய வண்டானது

உனது அடி போதில்

தேவரீருடையதிருவடித்தாமரைகளில்

ஒண் சீர் ஆம்தெளி தேன் உண்டு அமர்ந்திட வேண்டி

அழகிய குணங்களாகிற தேனைப்பருகி நித்ய வாஸமபண்ண விரும்பி

நின் பால்

தேவரீரிடந்தில்

போந்தது

வந்து சேர்ந்தது;

அதுவே

அத்திருக்குணங்களையே

ஈந்திட வேண்டும்

அளித்தருள வேணும்;

இது அன்றி

இத்திருக்குணங்களைத் தவிர

ஒன்றும்

வேறொன்றையும்

மாந்த கில்லாது

(நெஞ்சு) புஜிக்க மாட்டாது;

இனி

இப்படியான பின்பு

மற்று ஒன்று காட்டி

வேறொரு விஷயத்தைக் காட்டி

மயக்கிடல்

மயக்கவேண்டா

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்வாமிந்! அடியேனுடைய நெஞ்சு தேவரீருடைய திருக்குணங்களையே எப்போதும் அநுபவிக்க விருப்பங்கொண்டு மேல்விழுந்து தேவரீரிடம் வந்து சேர்ந்தது. இது இனி வேறொன்றை விரும்பாது; தேவரீரும் இனி இதை ஸம்ஸாரத்தில் போகவொடட்டாமல் தேவரீனிடத்திலேயே நிலைநிறுத்திக் கொள்ளவேணும். என்றாராயிற்று.

தமது நெஞ்சை ஒரு வண்டாக ரூபணம் பண்ணினதற்கு ஏற்ப எம்பெருமானாருடைய திவ்ய புணங்களை மதுவாக ரூபணம் பண்ணினார். இந்த வண்டுக்கு அந்தந் தேன் தவிர வெறொன்றும் ரஸிக்க மாட்டாது.

மயக்கிடல் = முனினிலை யெதிரமறை வினைமுற்று. மயக்காதே என்றபடி

 

English Translation

O Ramanuja! My heart is a golden bee hovering around you desirous of drinking the sweet nectar of your glory –flood flowing from the lotus of your feet. The bee cannot drink anything else. Pray give it what it wants. Do not show something else and trick it away from you!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top