ஆறாந் திருமொழி
(3064)
வைகுந்தாமணிவண்ணனே, என்போல்லாத்திருக்குறளா,
என்னுள்மன்னி, வைகும்வைகல்தோறும் அமுதாயவானேறே,
செய்குந்தாவருந்தீமையுன்னடியார்க்குத்தீர்த்தசுரர்க்குத்தீமைகள்
செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன் கொள்சிக்கெனவே.
(3065)
சிக்கெனச்சிறுதோரிடமும் புறப்படாத்தன்னுள்ளே, உலகுகள்
ஒக்கவேவிழுங்கிப் புகுந்தான்புகுந்ததற்பின்,
மிக்கஞானவெள்ளச்சுடர்விளக்காய்த் துளக்கற்றமுதமர்ய், எங்கும்
பக்கநோக்கறியானென் பைந்தாமரைக்கண்ணனே.
(3066)
தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்
பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,
நாமருவி நன்கேத்தியுள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட, நாவலர்
பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே.
(3067)
வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,
தெள்கல்தந்த எந்தாய் உன்னையெங்ஙனம்விடுகேன்,
வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து
உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே
(3068)
உய்ந்து போந்தென்னுலப்பிலாத வெந்தீவினைகளை நாசஞ்செய்துஉன்
தந்தமிலடிமையடைந்தேன் விடுவேனோ,
ஐந்துபைந்தலையாடரவணைமேவிப்பாற்கடல்யோகநித்திரை,
சிந்தைசெய்தவெந்தாய் உன்னைச்சிந்தைசெய்துசெய்தே.
(3069)
உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?
(3070)
முடியாத்தென்னெக்கேலினி முழுவேழுலகு முண்டான் * உகந்துவந்து
அடியேனுள் புகுந்தான் அகல்வானு மல்லனினி *
செடியார்நோய்களெல்லாந்துரந்து எமர்கீழ்மேலெழுபிறப்பும் *
விடியாவெந்நகரத்து என்றும் சேர்ந்தல்மாறினரே.
(3071)
மாறிமாறிப்பலபிறப்பும்பிறந் தடியையடைந்துள்ளந்தேறி
ஈறிலின்பத்திருவெள்ளம் யான்மூழ்கினன்,
பாறிப்பாறியசுர ர்தம்பல்குழாங்கள்நீறெழ, பாய்பறவையொன்
றேறிவீற்றிருந்தாய் உன்னை யென்னுள்நீக்கேலெந்தாய்
(3072)
எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய், மராமரம்
பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா!
கொந்தார்தண்ணந்துழாயினாயமுதே! உன்னையென்னுள்ளே குழைத்தவெம்
மைந்தா! வானேறே, இனியெங்குப்போகின்றதே?
(3073)
போகின்றகாலங்கள்போயகாலங் கள்போகுகாலங்கள், தாய்தந்தையுயி
ராகின்றாய் உன்னைநானடைந்தேன்விடுவேனோ,
பாகின்றதொல்புகழ்மூவுலகுக்கும் நாதனே. பரமா, தண்வேங்கட
மேகின்றாய்தண்டுழாய் விரைநாறுகண்ணியனே.
(3074)
கண்ணித்தண்ணந்துழாய்முடிக் கமலத்தடம்பெருங் கண்ணனை, புகழ்
நண்ணித்தென்குருகூர்ச்சடகோபன்மாறன்சொன்ன,
எண்ணில்சோர்விலந்தாதியாயிரத் துள்ளிவையுமோர்பத்திசையொடும்,
பண்ணில்பாடவல்லாரவர் கேசவன்தமரே.
