(3067)

(3067)

வள்ளலே,மதுசூதனா, என்மரகதமலையே, உனைநினைந்து,

தெள்கல்தந்த எந்தாய் உன்னையெங்ஙனம்விடுகேன்,

வெள்ளமேபுரைநின்புகழ்குடைந்தாடிப்பாடிக்களித்துகந்துகந்து

உள்ளநோய்களேல்லாம் துரந்துய்ந்து போந்திருந்தே

 

பதவுரை

வள்ளலே

உதாரனே!

மது சூதனா

மதுஸூதநனே!

என் மரதக மலையே

என்னுடைய அநுபவத்திற்குரிய மரதகமலை போன்றவனே!

உனை நினைந்து

உன்னை யநுஸந்தித்து

எள் கல்

ஈடுபட்டிருக்கும்படியான தன்மையை

தந்த

உண்டாக்கின

எந்தாய்

ஸ்வாமியே!

வெள்ளமேபுரை

கடல் போன்ற

நின் புகழ்

உன்னுடைய திருக்குணங்களில்

குடைந்து

மூழ்கி

ஆடி பாடி

ஆடியும் பாடியும்

களித்து

செருக்குக் கொண்டு

உகந்து உகந்து

மிகவும் மகிழ்ந்து

உள்ள நோய்கள் எல்லாம் துரந்து

உண்டான துன்பங்களெல்லாம் தொலையப்பெற்று.

உய்ந்து

உஜ்ஜூவித்து

போந்து

(உன்னைக்) கிட்டினவனாயிருந்துவைந்து

உன்னை எங்ஙனம் விடுகேன

உன்னை எப்படி விட்டிடுவேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் நாம் நாம் என்று ஒரு தடவைக்கு இரு தடவையாகச் சொன்னது ஆழ்வார் தம்முடைய நைச்சியத்தை யெடுத்துக் காட்டினபடியாதலால், நைரிச்சியாநுஸந்தானம் பண்ணப் புகுந்தவிவர், நம்மை யொருகால் விட்டுவிடுவாரோ? என்று எம்பெருமான் அதிசங்சை கொள்ள, உன் வடிவழகை நிர்ஹேதுகமாக நீயே யென்னை அநுபவிப்பிக்க அநுபவித்து அதனாலே சிதிலனாயிருக்கின்ற நான், உன்னை விடப்ரஸக்தியுண்டோ வென்கிறார். உலகத்தில் தானஞ் செய்கிறவர்களெல்லாரும் வள்ளல் என்று சொல்லப்படார்கள்; ஒருவித வுபகாரமும் செய்யாதவர்களிடத்துக் கைம்மாறு கருதாமல் எபகாரம் செய்பவர்களே வள்ளல் எனப்படுவார்கள். இங்கு அப்படியே எம்பெருமான் நிர்ஹேதுகமாகத் தம்மை விஷயீகாரித்தமை தோன்ற வள்ளல்! என்கிறார். எம்பெருமான் தன்னை ஸர்வஸ்வதானமாகக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள வொண்ணாதபடி தடையாக நிற்கக்கூடிய பிரதி பந்தகங்களையும் தானே போக்கித்தந்தானென்ற கருத்துப்பட மதுசூதனா என்கிறார். “நீ உன்னைத் தருமிடத்தில் நான் ஸ்வீகாரியாதபடி பண்ணும் விரோதிகளை மதுவாகிற அஸூரனை நிரஸித்தாப்போலே நிரஸித்தவனே” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.

எம்பெருமான தமக்கு உபகாரித்தருளினது அவன்றன்னுடைய அற்புதமர்ன வடிவழகு என்பது தோன்ற என் மரதகமலையே! என்கிறார். பச்கை மாமலைபோன்ற திருமேனியை எனக்கு அநுபவிக்கத் தந்தருளினவனே; என்றபடி.

உனை நினைந்து எள்கல்தந்த எந்தாய்- இதற்கு இருவகையாகப் பொருள் கூறுவர்; எள்கல் என்பதற்கு இகழ்ச்சியும் ஈடுபாடும் பொருளாகும் இகழ்ச்சியாகப் பொருள் கொண்டால், உன்னைச் சிந்தித்து விஷயாந்தரங்களை நான் இகழ்ந்துவிடும்படி பண்ணினவனே! என்றதாம் ஈடுபாடாகப் பொருள் கொண்டால், உன்னை யநுஸந்தித்து, “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி-34) என்கிறபடியே ஆழ்ந்து ஈடுபடும்படி பண்ணித்தத்தவனே! என்றதாம்.

உன்னை எங்ஙனம் விடுகேன்-உன் பக்கலில் எந்த விஷயத்திற் குறைகண்டு உன்னைவிடுவேன்? ஔதார்யம், விரோதிநிரஸநசீலத்வம், வடிவழகிற் சிறப்பு முதலிய எல்லாவற்றாலும் குறையற்றிருக்கிறவுன்னை எப்படி விடுவேன்?

பின்னடிகளில் தம்முடைய நிலைமையின் வைலக்ஷண்யத்தை விவாரித்துரைக்கின்றார்; கடல்போன்ற உன்னுடைய திருக்கல்யாண குணங்களை ஓரிடமொழியாமே எங்கும் புக்கு அவகாஹித்து அதனாலுண்டான மகிழ்ச்சி மிகுதியினால் ஆடிப்பாடிக் களித்து க்ஷணந்தோறும் ப்ரிதிபெருகிவர, அயோக்யதாதுஸந்தாநத்தாலும் விச்லேஷத்தாலும் வந்த வ்யஸநங்களெல்லாவற்றையும் போக்கி உஜ்ஜீவித்து உன் திருவடிவாரத்திலே வந்து சேர்ந்திருக்கின்ற யான் உன்னை யெங்ஙனம் விடுகேன்? என்று அந்வயிப்பது.

 

English Translation

O My generous Lord and Father.  O My emerald mountain!  You gave me yourself to think on, and sing and dance in joy.  Your effulgent glory has cured me of my sickness.  Now that I am saved, how can I ever let you go!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top