(3066)

(3066)

தாமரைக்கண்ணனைவிண்ணோர் பரவும்தலைமகனை, துழாய்விரைப்

பூமருவுகண்ணி யெம்பிரானைப்பொன்மலையை,

நாமருவி நன்கேத்தியுள்ளி வணங்கி நாம்மகிழ்ந்தாட, நாவலர்

பாமருவிநிற்கத்தந்த பான்மையேவள்ளலே.

 

பதவுரை

தாமரை கண்ணனை

தாமரைமலர் போன்ற திருக்கண்களை யுடையவனும்

விண்ணோர்பரவும்

நித்யஸுரிகள் புகழ்கின்ற

தலைமகனை

ஸ்வாமியும்

விரை பூ மருவு

பாரிமளமுள்ள புஷ்யங்கள் பொருந்திய

துழாய் கண்ணி

திருத்துழாய் மாலையை யணிந்த

எம்பிரானை

எம்பெருமானும்

பொன் மலையை

பொன்மலை போன்று உயர்ந்து விளங்குபவனுமான திருமாலை யாம் அடைந்து

நன்கு ஏத்தி

நன்றாகத் துதித்து

உள்ளி

சிந்தித்து

வணங்கி

நமஸ்காரிந்து (இப்படி மூன்று கரணங்களாலுமுண்டான அநுபவத்தாலே)

நாம் மகிழ்ந்து ஆட

நாம் ஸந்தோஷத்தோடு நா;த்தனம் பண்ணும் படியாகவும்

நா அலர் பா மருவி நிற்க

நாக்கில் அலாகின்ற பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படியாகவும்

தந்த

உபகாரம் செய்தருளின

வள்ளல் பான்மை ஏ

உதாரகுணம் என்னே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்ய ஸூரிகளுக்குப்போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்தாரியம் முதலானவற்றை வருணிப்பதற்குப் பாங்கான வாக்கை அளித்தருளினானெம்பெருமான்; அவனுடைய வள்ளல்தனம் இருக்கும்படி என்னே! என்று விஸ்மயப்படுகிறார்.

“தாமரைக்கண்ணணை விண்ணோர்பரவுந்தலைமகனை” என்ற சொற்சேர்த்தியினால் கிடைக்கும் ரஸப்பொருளை நமபிள்ளை காட்டுகிறார்-“ஒருகால் திருக்கண்களாலே குளிரநோக்கினால் அதிலே தோற்று ஜ்வரஸந்நிபதிதரைப்போலே அடைவுகெட ஏத்தா நிற்பர்களாயிற்று நித்யஸூரிகளைத் தன்னுடைய கண்ணழகிலே தோற்பித்து அதைப்பற்றியே அவர்கள் வாய்வெருவிக் கொண்டிருக்குமாறு செய்வதுபோலே அடியேன் திறத்திலும் செய்தருளினென்பது குறிப்பு.

(துழாய் விரை யித்யாதி)- பூவும் பாரிமளமும் மாறாதேயிருக்கும் திருத்துழாய் மாலையாலே அலங்காரிக்கப்பட்ட தன்னுடைய வடிவழகை எனக்கு நிர்ஹேதுகமாகக் காட்டித்தந்தவனென்றவாறு. (பொன்மலையை) அழ்வாரை விட்டுப் பெயர்ந்துபோகமாட்டாமல் ஸ்தாவரப்ரதிஷ்டையாக எம்பெருமானிருக்கிற விருப்புக்குப் பொன்மலை உவமையென்க.

(நாம் மருவி யித்யாதி) நித்யஸூரிகள் துதிக்கவேண்டிய விஷயத்தை அயோக்யனான நானும் நன்கு பொருந்தித் துதிக்கும்படியாகச் சில பாசுரங்களைப் பாடுந்திறமையை எனக்குத் தந்தருளின ஔதார்யம் என்னே! என்றதாயிற்று. மூன்றாமடியில் நாம் என்கிற சொல் இரண்டு தடைவ வந்தது, தம்முடைய தகுதியின்மையைச் சுட்டிக் காட்டுதற்காம.

 

English Translation

My Lord of lotus eyes, who wears a garland of sweet fragrant Tulasi flowers, is a mountain of gold, praised even by the celestials, He lets us approach him with praise and worship him through song.  He lets us think of him and dance in joy. How generous of him!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top