(3072)

(3072)

எந்தாய்தண்திருவேங்கடத்துள் நின்றாய்! இலங்கைசெற்றாய், மராமரம்

பைந்தாளேழுருவவொரு வாளிகோத்தவில்லா!

கொந்தார்தண்ணந்துழாயினாயமுதே!உன்னையென்னுள்ளே குழைத்தவெம்

மைந்தா!வானேறே, இனியெங்குப்போகின்றதே?

பதவுரை

எந்தாய்

ஸ்வாமியே!
தண் திருவேங்கடத்துள் நின்றாய்

குளிர்ந்த திருவேங்கட மலையிலே நிற்பவனே!
இலங்கை செற்றாய்

லங்காபுரியை அழித்தவனே!
மராமரம்

மராமரங்களினுடைய
பை தாள் ஏழ்

பருத்த அடிகள் எழும்
உருவ

உருவும்படி
ஒரு வாளி கோத்த வில்லா

ஒரு அம்யை தொடுத்த வில்லை யுடையவனே!
கொந்து ஆர்தண் அம் துழாயினாய்

கொத்துக்கள் நிறைந்து குளிர்ந்தழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனே!
எம் அமுதே

எனக்கு அமுதமர்னவனே!
உன்னை என்னுள்ளே குழைத்த மைந்தா

என்னோடு ஒரு நீராக்க கலந்த மைந்தளே!
வான் ஏறே

நித்யஸூரி நாதனே!
இனி எங்கு போகின்றது

இனி என்னைத் தவிர உனக’கு வேளு போக்கிட முண்டோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முதலிலே உன்னை யறியாதிருந்தலெனக்கு, உன்னையும் உன்னுடைய போக்கியதையையுமறிவித்து, உன்னைவிட்டகன்று உயிராற்றமாட்டாதபடியான நிலைமையையும் விளைவித்த நீ, இனி என்னைவிட்டுப் பிரிந்துபோவது தகுதியோ வென்கிறார். என்னை அடிமை கொண்டருளுகைக்காகப் பரமபோக்யமான திருவேங்கடமலையிலே நின்றருளினவனே! அஹங்காரமே வடிவெடுதத்த இராவணனைத் தொலைத்தாப்போலே என்னுடைய அஹங்கார மமகாரங்களையும் போக்கியருளினவனே!, வாலிவதத்திற்குப் பூர்வாங்கமாக மராமரமேழையும் எய்து, ஸூக்ரிவனை விச்வஸிப்பித்தாப்போல, எனக்கும் அரியனசெய்து விச்வாஸத்தை யுண்டாக்கினவனே; தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுட்ர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மானே! என்னமுதமே!, என்னேடே கலக்கிற போது ஒரு நீராகக் கலந்துவிட்டு, இனி அகல்வது எங்ஙனேயோ? உனக்குப் போக்கிடந்தானுண்டோ?

English Translation

My Lord standing on the cool Venkatam hill, Destroyer of Lanka!  My Lord who shot a mighty shaft uprooting seven trees!  My Lord of celestials, Ambrosia, Lord wearing cool Tulasi flowers!  My Prince, you have mingled into me, now whether can you go?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top