6 – 6 மாலுக்கு

(3506)

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,

நீலக் கருநிற மேக நியாயற்கு,

கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்

ஏலக் குழலி யிழந்தது சங்கே.

விளக்க உரை

(3507)

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,

செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,

கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்

மங்கை யிழந்தது மாமை நிறமே.

விளக்க உரை

(3508)

நிறங்கரி யானுக்கு நீடுல குண்ட,

திறம்கிளர் வாய்ச்சிறு கள்ள னவற்கு,

கறங்கிய சக்கரக் கையவ னுக்கு,என்

பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.

விளக்க உரை

(3509)

பீடுடை நான்முக னைப்படைத்தானுக்கு,

மாடுடை வையம் அளந்த மணாளற்கு,

நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,என்

பாடுடை அல்குல் இழந்தது பண்பே.

விளக்க உரை

(3510)

பண்புடை வேதம் பயந்த பரனுக்கு,

மண்புரை வையம் இடந்த வராகற்கு,

தெண்புனல் பள்ளியெந் தேவப் பிரானுக்கு,என்

கண்புனை கோதை இழந்தது கற்பே.

விளக்க உரை

(3511)

கற்பகக் காவன நற்பல தோளற்கு,

பொற்சுடர்க் குன்றன்ன பூந்தண் முடியற்கு,

நற்பல தாமரை நாண்மலர்க் கையற்கு,என்

விற்புரு வக்கொடி தோற்றது மெய்யே.

விளக்க உரை

(3512)

மெய்யமர் பல்கலன் நன்கணிந் தானுக்கு,

பையர வினணைப் பள்ளியி னானுக்கு,

கையொடு கால்செய்ய கண்ண பிரானுக்கு,என்

தையல் இழந்தது தன்னுடைச் சாயே.

விளக்க உரை

(3513)

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,

பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்

வாசக் குழலி இழந்தது மாண்பே.

விளக்க உரை

(3514)

மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,

சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,

காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்

பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

விளக்க உரை

(3515)

பொற்பமை நீண்முடிப் பூந்தண் டுழாயற்கு,

மற்பொரு தோளுடை மாயப் பிரானுக்கு,

நிற்பன பல்லுரு வாய்நிற்கு மாயற்கு,என்

கற்புடை யாட்டி யிழந்தது கட்டே.

விளக்க உரை

(3516)

கட்டெழில் சோலைநல் வேங்கட வாணனை,

கட்டெழில் தென்குரு கூர்ச்சட கோபன்சொல்,

கட்டெழில் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

கட்டெழில் வானவர் போகமுண் பாரே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top