(3513)

(3513)

சாயக் குருந்தம் ஒசித்த தமியற்கு,

மாயச் சகடம் உதைத்த மணாளற்கு,

பேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்கு,என்

வாசக் குழலி இழந்தது மாண்பே.

பதவுரை

குருந்தம் சாய ஒசித்த தமிபற்கு

குருந்தமரம் வேரோடுபறியுண்டு சாயும்படி அதனை முறித்த அத்விதீயனும்
மாயம் சகடம் உதைத்த மணாளற்கு

க்ருத்ரிம்மான (அஸுராவேசங்கொண்ட) சகடத்தைப் பொடிபடுத்தின மணவாளனும்
பேயை பிணம் படபால் உண்பிரானுக்கு

பூதனையென்கிற பேய்ச்சி பிணமாகும்படி அவளது முலைப்பாலை யுண்டவனுமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் வாசம் குழலி

வாசனைபொருந்திய கூந்தலையுடையளான என்மகள்
இழந்தது மாண்பு

இழந்தது தன் மாட்சிமை யாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சாயக்குருந்தம்) இப்பாட்டில், என்னுடைய பெண்பிள்ளை தன்னுடைய மாட்சியை யிழந்தா ளென்கிறாள். எவ்வளவோ பெருமையாக வாழ்ந்தவள் அப்பெருமையெல்லாம் போய் இங்ஙனே தரைப்பட்டுக்கிடக்கின்ற பரிதாபம் என்னே! என்கிறாள்.

சாயக்குருந்த மொசித்த தமியற்கு – கண்ணபிரான், யமுனையில் நீராடும் ஆயர்மங்கைகளின் துகிலை வாரிக்கொண்டு “குருந்திடைக்கூறை பணியாய்“ என்று அவர்கள் இரக்கும்படி குருந்தமரத்தின்மேல் ஏறியிருப்பது வழக்கம். இதனையறிந்தவனும் கம்ஸனால் ஏவப்பட்டவனுமா ஓர் அஸுரன் கண்ணனை நலிவதற்காக அக்குருந்தமரத்தை ஆவேசித்துக்கிடந்தான், அதையறிந்த கண்ணபிரான் அந்தமரத்தை முறித்து அவ்வசுரணைப் பிணமாக்கினன் என்பது வரலாறு. இப்படி குருந்தொசித்தும் மாயச் சகடிணையுதைத்தும் பூதனையென்கிறனன் என்பது வரலாறு. இப்படி குருந்தொசித்தும் மாயச்சகடிணையுதைத்தும் பூதனையென்கிற பேய்ச்சியைப் பிணமாக்கியும் அவன் செய்த சிறுச் சேவகங்களை என்மகள் பாடிப்பாடி நைகின்றாளென்றதாயிற்று.

English Translation

My fragrant-tressed daughter has lost her beauty, -to the Lord who singly uprooted the Kurundu trees, to the groom who smote the laden cart, to the child who drank the ogress’s milk and killed her.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top