(3514)

(3514)

மாண்பமை கோலத்தெம் மாயக் குறளற்கு,

சேண்சுடர்க் குன்றன்ன செஞ்சுடர் மூர்த்திக்கு,

காண்பெருந் தோற்றத்தெங் காகுத்த நம்பிக்கு,என்

பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.

பதவுரை

மாண்பு அமை கோலத்து

அழகமைந்த வடிவையுடையனான
எம் மாயம் குறளற்கு

எம்மையீடுபடுத்திக்கொள்ளும் மாயவாமனமூர்த்தியும்
சேண் சுடர் குன்று அன்ன

உயர்ந்த சோதிமயமான குன்று போன்ற
செம் சுடர் மூர்த்திக்கு

செவ்விய சுடரையுடைய வடிவு கொண்டவனும்
காண் பெருதோற்றத்து

அனைத்துலகும் காணப்பர்வத்தையுடைய
என் காகுத்தன் நம்பிக்கு

இராமபிரானுமான பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
என் பூண் புனைமென் முலை

ஆபரணங்களையணிந்தமெல்லிய முலைகளை யுடையளான என்மகள்.
தோற்றது பொற்பு

இழந்தது அழகாம்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மாண்பமை கோலத்து) இப்பாட்டில் என்மகள் அழகிழந்தாளென்கிறாள். தன்னழகாலே அவனைவசப்படுத்திக் கொள்ள பிறந்தவிவள் அவனழகிலே யீடுபட்டுத் தன்னழகை யிழந்தாளென்று வருந்துகிறாள்.

மாண்பமை கோலத் தெம்மாயக்குறளற்கு – * மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ வெய்த முன்னிவ்வுலகினை முற்றுமளந்தவன் * என்கிறபடியே மாவிலன் வேள்வியிலே குறட்பிரமசாரியா யெழுந்தருளின அழகை அந்த மாவலியின் தேவிமார் கண்டு ஹா! ஹா! இப்படியும் ஓரழகுண்டோ வென்று வியந்து ‘இச்சிறுபிள்ளை எது கேட்டாலும், தானம் பண்ணியாக வேணும்‘ என்று கூறினார்களாம். * க்ருத்திம் க்ருஷ்ணம்ருகஸ்ய லக்ஷஸிவஹந் ஆஷாடமம்ஸேப்பயந், ஸ்வாத்யாயஸ்வரஸம்பதா பரிஷதாம் ப்ரீதிம் ஸமுத்பாதயந் யாச்ஞாயை பலியஜ்ஞவாடநிகடம் ப்ராப்தோ வடு, பாதுவ * என்னும்படியான அவ்வடிநெஞ்சு பறிகொடுக்கமாட்டாதே ஸ்வராஜ்யம் வேணுமென்றிவ்வளவே ஆசை கொண்டு வந்த இந்திரனுக்காக இத்தனைகாரியம் செய்பவன் என்னை இப்பாடுபடுத்துகிறானேயென்று தளர்கின்றாளென்கிறாள்.

English Translation

My soft-breasted jewel-girl has lost her radiance, -to the Lord who came as beautiful groom, the Kakutsha Lord who looks a perfect hero, and rises tall like a dark radiant mountain.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top