(3507)

சங்குவில் வாள்தண்டு சக்கரக் கையற்கு,

செங்கனி வாய்ச்செய்ய தாமரை கண்ணற்கு,

கொங்கலர் தண்ணந் துழாய்முடி யானுக்கு,என்

மங்கை யிழந்தது மாமை நிறமே.

பதவுரை

சங்கு வில் வாள் தண்டு சக்கரம் கையற்கு

பஞ்சாயுதங்களையும் திருக்கையிலே உடையவரும்
செம் கனி வாய் செய்ய தாமரை கண்ணற்கு

சிவந்த கனிபோன்ற அதரத்தையும் செந்தாமரைக் கண்களையுமுடையவரும்
கொங்கு அலர் தண் அம் துழாய் முடியானுக்கு

தேனொழுகப் பெற்றுக் குளிர்ந்தழகிய தருத்துழாய் மாலையைத் திருமுடியிலுடையவருமான எம்பெருமான் விஷயத்திலீடுபட்டதனால்
எள் மங்கை இழந்த்து

என்பெண்பிள்ளை யிழந்தது
மாமை நிறம்

அழகிய நிறமாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சங்குவில்வாள்) இப்பாசுரத்தில், தன் மகள் மாமை நிறை மிழந்த்தாகச் சொல்லுகின்றாள். மாமை நிறமாவது பெண்மைக்கு அஸாதாரணமான நிறம் என்பர். எம்பெருமானது சில திருக்குணங்களை நினைத்து ‘இத்தகைய குணசாலியோடு நமக்கு நித்ய ஸம்ச்லேஷம் வாய்க்கவில்லையே!‘ என்று நைந்து நிறம வேறுபட்டாளென்கிறது.

சங்கு வில்வாள்தண்டு சக்கரக்கையற்கு – என்பதனால் பஞ்சாயுதங்களோடு கூடியிருக்கும் நிலைமையை நினைத்து உருகுகின்றமை சொல்லுகிறது. * பாது ப்ரணதரக்ஷணாம் விலம்பமஸஹந்நிவ, ஸதாபஞ்சாயுதீம் பிப்ரத் ஸந, ஸ்ரீரங்கநாயக, * என்று, அடியார்களின் விரோதிகளைத் தொலைப்பதற்காகவேயன்றோ பஞ்சாயுதங்களையும் நம் பெருமான் அநவரதமும் ஏந்தியிருப்பது, அப்படியிருக்க நம் விரோதிகளைத் துணிந்து நம்மைச் சடக்கெனத் திருவடி சேர்த்துக் கொள்ளுதல் இவற்கு அருமையாயிற்றே! என்று உருகுகின்றாளென்கிறாள்.

செங்கனிவாய் – கொவ்வைக்கவிபோன்ற அதரம் படைத்திருப்பது என்போன்ற காதலிகள் பருகுவதற்கன்றோ? * எந்தொண்டை வாய்ச் சிங்கம்! வாவென்றெடுத்துக் கொண்டு அந் தொண்டைவாயமுதாதரித்து, ஆய்ச்சியர் தம் தொண்டை வாயால் தருக்கிப் பருகுமிச்செந் தொண்டைவாய் * என்கிறபடியே ஆய்ச்சியர்கட்கு எளதான செங்கனிவாய் எனக்கு அரிதாகவேணுமோ? என்று உருகுகின்றாளென்கை.

செய்ய தாமரைக் கண்ணற்கு – “ச்ரமணீவிதுர ரிஷிபத்நிகளைப் பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு சாத்தியிருப்பது எதற்காக? நானே ஸர்வலோக ஸம்ரக்ஷகனென்று தனிமாலையிட்டிருக்கிறபடியன்றோ? உலகத்தையெல்லாம் ரக்ஷித்துப்புகழ்படைத்திக்கின்றவர் என்னொருத்தியையும் ரக்ஷியாதே உபேக்ஷித்திருந்தால் இது முடிசூடியிருக்குந் தகைமைக்குத் தகுதியோ! என்று நைகின்றாளென்கை.

English Translation

My beautiful daughter has lost the pink in her cheeks, -to the conch-bow-dagger-mace-discus wielder, Lord of red lotus eyes and coral lips, who wears honey-dripping Tulasi flowers on his crown.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top