(3506)

(3506)

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு,

நீலக் கருநிற மேக நியாயற்கு,

கோலச்செந் தாமரைக் கண்ணற்கு,என் கொங்கலர்

ஏலக் குழலி யிழந்தது சங்கே.

பதவுரை

மாலுக்கு

அடியார் பக்கலில் வியாமோஹமுள்ளவரும்
வையம் அளந்த மனாளற்கு

பூமி முழவத்தையும் (த்ரிவிக்ரமனாய்) ஸ்வாதீனப்படுத்திக் கொண்ட மணவாளரும்
நீலம கருநிறம் முகம் நியாயற்கு

நெய்த்துக் கறுத்த நிறத்தையுஐடய மேகத்தை யொத்தவரும்
கோலம் செம் தாமரை கண்ணற்கு

அழகிய செந்தாமரை போன்ற திருக்கண் களையுடைவனாவருமான எம்பெருமான் விஷயத்தில் ஈடுபட்டதனால்
என் கொங்கு அவர் ஏலம் குழலி இழந்து சங்கு

தேனொழுகும் மலர்களணிந்து நறுமணம் மிக்க கூந்தலை யுடையனாள என்மைகள் இழந்த்து கைவளையாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மாகலுக்கு) இத் திருவாய்மொழியிலுள்ள விசேஷ்ய பதங்கள் யாவும் விசேஷ்ணமாத்ரமாய் நின்றுஅவ்யிக்கும் – அதாவது “மால்“ என்கிறபடி சொல்லுக்கு இங்கு  வியாம்மோஹமுடையவன் என்று பொருளாகக் கொள்ளத் தக்கதென்க. இப்படியே ஒவ்வொன்றும் காண்க. செநதாமரைக் கண்ணதற்கு என்றதற்கு கண்களையுடையவன் என்று பொருளாளும் கண்கள் என்றவளவிலேயே பொருளை நிறுத்திக் கொள்க. எதற்காக இப்படியென்னில், ஒவ்வொரு விசேஷணாம்சங்களையும் நினைத்து என்மகள் தளர்கின்றாள் என்று சொல்லுவதே இங்குச் சுவையுடைத்து.

என் மகள் மாலுக்குச் சங்கிழந்தாள், வையமளந்த மணாளற்குச் சங்கிழந்தாள், நீலக்கருநிறமேகநியாயற்குச் சங்கிழந்தாள், கோலச் செந்தாமரைக்கண்ணற்குச் சங்கிழந்தாள் – என்றிங்ஙனே தனித்தனி யோஜித்து, அவன் ஆச்சரிதர்பக்கலில் கொண்டு வியாமோஹத்தை நினைத்தவாறே சங்கிழந்தாள், அவன் வையமளந்த சீல குணத்தை நினைத்தவாறே சங்கிழந்தாள், அவனது திருநிறத்தை நினைத்தவாறே சங்கிழந்தாள், அவனது செந்தாமரைக் கண்களை நினைத்தவாறே சங்கிழந்தாளென்கிறாள் என்க.

சங்கிழப்பதாகக் கூறுதலின் கருத்து மேனி மெலிந்தா ளென்பதேயாம். தலைமகள் தலைமகனைப்பிரிந்து வருந்துவதனால் உடல் ஈர்க்குப்போலாக, கைகளில் பொருத்தமாக அணியப்பெற்றிருந்த வளைகள் அவலீலையாகக் கழன்றுவிழுதல் இயல்பு. இவ்விதமாக என்மகள் உடல் இளைக்கப்பெற்றாள் என்ற கருத்தைவைத்து ‘என் .. இழந்த்து சங்கே‘ என்றாள் தாய். ••••நயாமீதிதவே வத்தி புரஸ்தாத்க்ஷணேந தந்வங்க்யா, கலிதாந புராவலயாநி அபராணி புநஸ் த்தைவ தலிதாநி. * என்று ச்லோகத்தின தாற்பரியம் இங்கே நினைக்கத்தகும். அதாவது – நாயகன் நாயகியை நோக்கி “என் கண்மணி! நான் உன்னைப்பிரிந்து ஓர் ஊருக்குச் செல்லுகின்றேன்“ என்று சொல்லி வாய் மூடுவதற்குள்ளே அவளது கையல் அணியப்பட்டிருந்த வளைகளில் முன்னேயிருந்த வளைகள் கழன்று கீழே விழுந்தன. (உடம்பு க்ருசமாயக்போகத் தொடங்கின்ற்று என்கை.) அதனைக் கண்ட நாயகன் “இவள் நமது பிரிவைப்பொறுத்திருக்கக் கூடியவளன்றாதலால் இவளைப் பிரிந்து நாம் வெளியேறலாகாது “ என்று நினைத்து உடனே “நயாமி“ என்று ஒரு பதமாகவே கொண்டால் “ அப்படி நான் வெளியூர் போவதாயிருந்தால் உன்னையும் அழைத்துக் கொண்டு போகிறேன்“ என்று பொருள்படும். தலைவி நிபுணையாகையாலே இவ்விரண்டு பொருள்களையும் தெரிந்துகொண்டாள். நயாமி என்ற இச்சொல் செவிப்பட்டக்ஷணத்திலேயே முன்னம் கழன்று வீழ்ந்த வளைகள் போக நின்ற வளைகள் படீலென்று வெடித்துத் துகளாய்ப்போயினவாம். நாயகனுடைய விச்லேஷம் ப்ரஸ்தாவத்தில் வந்தமாத்திலத்திலேயே நாயகியின் உடல் மிகவும் மெலிந்துபோம் என்பதும், அந்த விச்லேக்ஷவார்த்தை மாறினவாறே உடம்பு பூரிக்கும்மென்பதும் இதனால் தெரிவிக்கப்பட்டதாம். ஆகவே ‘இழந்து சங்கே‘ என்றது மேனி மெலிந்தாளென்றதற்குப் பர்யாயமாய் நின்றது.

மாலுக்கு – பகவத்கீதையில் ஒன்பதாமத்தியாயத்தில் (29) * ஹ்மோஹம் ஸர்வபூதேஷு* என்ற ச்லோகத்தில் ••••  என்னடியார்கள் என்மீது எவ்வளவு வியாமோஹம் கொண்டிருக்கிறார்களோ, நானும் அவ்வளவு வியாமோஹம் அவர்கள்மீது கொண்டிருப்பேன், என்னிற்காட்டில்  மேம்பட்டவர்களிடத்தில் நான் எப்படி வர்த்திப்பேனோ அப்படி அவர்கள் திறந்திலும் வர்த்திப்பேன் என்பது கருத்து. இப்படிப்பட்ட வியாமோஹ குணத்தை நினைத்து மகள் உருகுகின்றாளென்றவாறு.

வையமளந்த மணாளற்கு – ••••எம்பெருமான் மாவலிபாக்கல் யாசிக்கச் சென்றபோது,

மாவலி கேட்கிறான் – கஸ் த்வம் ப்ரஹ்மந்! – அந்தணா! நீ யாவன்.

பகவான் – (அபூர்வ) நான் இதற்குமுன்பு ஒருநாளும் யாசிக்கவந்தவ னல்லேன் என்று மேலெழுத்து பொருள், என்னில் முற்பட்டவன் எவனும் இல்லை, நானே யாவர்க்கும் முற்பட்டவன் என்பது ஹார்த்தமான பொருள்.

மாவலி – (க்வ ச தவ வஸதி?) உன் இருப்பிடம் எது?

பகவான் – (யா அகிலா ப்ரஹ்மஸ்ருஷ்டி) யாசகனுக்கு இருப்பிடம் என்று ஒன்றுண்டோ? பிரமன் படைத்தவிடமெங்கும் தட்டித்திருபவனெ நான் என்பதுமேலெழுந்த பொருள் * பரந்ததண்பரவையுள் நீர்தொறும் பரந்துளன் * ஆங்கையுள்ளுமாவியுள்ளு மல்லபுறத்திள்ளும் நீக்கமின்றியெங்கும் நின்றாய் * என்கிறபடியே நானில்லாத இடமில்லை என்பது ஹார்த்தமான பொருள்.

மாவலி – (கஸ தே த்ராதா?) நீ யாருடைய ஸம்ரக்ஷணையிலிருக்கிறாய்?

பகவான் – (அநாத) இந்தப் பிச்சைக்காரனுக்கு ஸம்ரக்ஷகருண்டோ? காப்பார் கேட்பாரற்றுத் திரிந்துகொண்டிருக்கிறேன் என்பது மேலெழுந்த பொருள். உலகுக்கெல்லாம் நானே நாதனாதலால் எனக்கொரு நாதனுண்டோ? என்பது உள்ளுறை பொருள்.

மாவலி – (க்வ ச தவ ஜநக) உன் தகப்பனார் எங்கே?

பகவான் – (நைவ தாதம் ஸ்மராமி) சிசுப்பிராயத்திலேயே தாய் தகப்பன்மார்களை இழந்த அநாதனாகையால் தகப்பனாருடைய ஞாபகமே எனக்கில்லை யென்பது மேலெழுந்தபொருள். உண்மையில் * மகனொருவர்க்கல்லாத மாமேனிமாயன் * என்கிறபடி தான் ஒருவர்க்கும் புத்திரனன்றிக்கே ஸர்வலோக பிதாவாதலால் தகப்பனே கிடையாதென்கை உள்ளுறை.

பகவான் – (த்ரிபத டரிமிதா பூமி) மூவடி நிலம் வேண்டுமத்தனை. மூவுலகமும் என்பது உள்ளுறை.

மாவலி – (அத்யல்பம் ஏதத்) கல்ப வருக்ஷத்தினிடத்துச் சென்று கௌபீநதானம், கேட்கு மாபோலே என்னிடத்தில் வந்து இந்த அல்பதானம் விரும்புகின்றாயே! என்றானாம். இங்ஙனே சாதுரியமாகப் பேசி மூவடி நீரேற்றுப்பெற்று மூவுலகத்தையும் அளக்கப் புக்கவாறே “மிக்கபெரும்புகழ் மாவலி வேள்வியல் தக்கதிதன்றென்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய“ என்றும், “என்னிதுமாயம் என்னப்பனறிந்திலன் முன்னையவண்ணமே கொண்டளவாயென்ற மன்னுநமுசியை வானில் சுழற்றிய“ என்றும் சொல்லுகிறபடியே செய்த விரோதிநிரஸனம் முதலியவற்றை நினைத்து அந்த அபதானத்திலே யீடுபட்டு என் மகள் உருகுகின்றாளென்றவாறு.

நீலக்கருநிறமேகநியாயற்கு – மேகத்தின் வடிவுபோன்ற வடிவைநினைத்து, அல்லது மேகத்தின் தன்மைபோன்ற தன்மையை நினைத்து உருகுகின்றாளென்கை. பெய்யவேண்டிய இடமளவுஞ் சென்று பெய்யும் மேகம், எம்பெருமான் * வந்தருளி யென்னெஞ்சிடங்கொண்ட வானவர் கொழுந்து * என்கிறபடியே ஆங்காங்குச் சென்றருளி அநுக்ரஹிப்பன். மின்னலுள்ளகாலம் நீர்நிரம்பியிருக்கும் மேகம், எம்பெருமானுக்கும் பிராட்டியோடு கூடியிருக்கும் காலத்திலே க்ருபாரஸம் விஞ்சியிருக்கும். “இவள் ஸந்நிதியாலே காகம் தலைபெற்றது. அதில்லாமையாலே ராவணன் முடிந்தான்“ என்ற முமுக்ஷுப்படி திவ்யஸூக்தி காண்க. இன்ன காலத்திலே மேகம் பெய்யுமென அறுதியிடவல்லார் ஆருமில்லை. பெய்யவேண்டிய காலத்தில் பெய்யாதொழியவும், பெய்வதற்கு ஜம்பாவநை யில்லாத காலத்தில் அசிந்திதமாகவந்து பெய்யவுங்கடவது மேகம். எம்பெருமான்படியு மப்படியே. * வந்தாய்போலே வாராதாய் வாராதாய்போல் வருவானே * என்பர். த்ரௌபதிக்கு மஹத்தான ஆபத்திலேவந்து முகம்காட்டாதொழிந்தான், அபேக்ஷா நிரபெக்ஷமாகத் * தாவியன்றுலகமெல்லாம் தலைவிளாங்கிகொண்டான். என்றிப்படிப் பலபடிகளாலே மேகத்திற்கும் எம்பெருமானுக்கும் நியாயங்கள் ஒத்திருக்குமே, அவற்றைப்பேசி யுருகுகின்றாளென்கை.

“மேகநியாயன்“ என்றது மேகநிகாச, அல்லது மேகந்யாய, என்ற வடசொல் விகாரமாகக் கொள்ளத்தகும். கருத்ல் வேற்றுமையில்லை.

கோலச் செந்தாமரைக் கண்ணற்கு – * பெருங் கேழலார் தம் பெருங்கண்மலர்ப் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார் * என்று தாமே பேசும்படி எம்பெருமான் தனது செந்தாமரைக்கண்ணோக்கத்தைத் தம்மேல் ஒருமைப்படுத்தி * எங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக்கண்ணனே * என்று நாச்சிமார் திருமலைத்தடத்தாலே நெருக்கியணைதாலும் புரிந்து பார்க்கவறியாதிருந்த தன்மையை நினைத்து உருகுகின்றாளென்கை.

என் கொங்கலரேலக்குழலி – கூந்தலானது தலைக்கு அலங்காரமாயிருக்கும், கூந்தலில்லாத தலை வெறுக்கத்தக்கதாயிருக்கும். அதுபோல வணக்கத்தோடுகூடிய தலை கொண்டாடத்தகுந்த்தாகவும் வணக்கமற்ற தலை வெறுக்கத்தக்கதாகவுமிருக்குமாதலால், கூந்தலென்பதற்கு அந்த வணக்கம் பகவத்விஷயத்தளவிலே நிற்கையன்றிக்கே பாகவதபர்யந்தமாகை. * திருமால் திருப்பேர் வல்லாரடிக்கண்ணி சூடியமாறன் * என்று தாமே பணித்தபடி பாகவதபக்தி நிரம்பியர் என்றவாறு.

English Translation

My fair coiffured daughter has lost her bangles, -to the groom of beautiful red lotus eyes, who came as a manikin and measured the Earth the Lord of dark cloud hue.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top