(2771)
பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, தாமரைமேல்
(2772)
மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை, பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர் விடையை,
தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை, மன்னிய தண்சேறை வள்ளலை, – மாமலர்மேல்
(2773)
அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி, என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,
கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை, மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்
பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை, மன்னும் அரங்கத்தெம் மாமணியை, –
(2774)
வல்லவாழ்
பின்னை மணாளனை பேரில் பிறப்பிலியை, தொன்னீர்க் கடல்கிடந்த தோளா மணிச்சுடரை,
என்மனத்து மாலை இடவெந்தை ஈசனை, மன்னும் கடன்மல்லை மாயவனை, – வானவர்தம்
(2775)
சென்னி மணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை, தன்னைப் பிறரறியாத் தத்துவத்தை முத்தினை,
அன்னத்தை மீனை அரியை அருமறையை, முன்னிவ் வுலகுண்ட மூர்த்தியுயை, – கோவலூர்
(2776)
மன்னும் இடைகழியெம் மாயவனை, பேயலறப், பின்னும் முலையுண்ட பிள்ளையை, – அள்ளல்வாய்
(2777)
அன்னம் இரைதேர் அழுந்தூர் எழும்சுடரை, தெந்தில்லைச் சித்திர கூடத்தென் செல்வனை,
(2778)
மின்னி மழைதவழும் வேங்கடத்தெம் வித்தகனை, மன்னனை மாலிருஞ் சோலை மணாளனை,
கொன்னவிலும் ஆழிப் படையானை, – கோட்டியூர்
(2779)
அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து
இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை, மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை,
மன்னிய பாடகத்தெம் மைந்தனை, – வெஃகாவில்,
(2780)
உன்னிய யோகத் துறக்கத்தை ஊரகத்துள்
அன்னவனை அட்ட புயகரத்தெம் ஆனேற்றை, என்னை மனங் கவர்ந்த ஈசனை, – வானவர்தம்