….. ………………. ……………….மற்றன்றியும்,
தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர்,
மன்னும் குறளுருவின் மாணியாய், – மாவலிதன்(2768)
பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர்
மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி,
என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண்,
மன்னா தரு கென்று வாய்திறப்ப, – மற்றவனும் (2769)
என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண்
மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த (2770)
பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங்
கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,
மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து,
தன்னுலகம் ஆக்குவித்த தாளானை, (2771)
பதவுரை
|
மற்று அன்றியும் |
– |
தவிரவும் |
|
தன் உருவம் ஆகும் அறியாமல் |
– |
தனது ஸ்வரூபத்தை யாரும் தெரிந்து கொள்ள வொண்ணாதபடி. |
|
தான் ஓர் மன்னும் |
– |
பரமபுருஷனான தான் ஒரு திவ்யமான வாமந வேஷங்கொண்ட பிரமசாரியாகி |
|
மா வலி தன் |
– |
மஹா பலியினுடைய தான |
|
பொன் இயலும் வேள்விக் கண் புக்கிருந்து |
– |
ஸவர்ணதானஞ் செய்யும் யாக பூமியிலே எழுந்தருளி |
|
போர் வேந்தர் மன்னை |
– |
போர் செய்யவல்ல மிடுந்தையுடைய அரசர்களில் தலைவனான அந்த மாவலியை |
|
மனம் கொள்ள வஞ்சித்து |
– |
(இப்பிரமசாரி யாசிப்பதற்காகவே வந்தானென்று) நம்பும்படியாக மயக்கி |
|
நெஞ்சு உருக்கி |
– |
(நடையழகு சொல்லழகு முதலியவற்றால) அவனது நெஞ்சை உருக்கி |
|
மன்னா |
– |
மஹாப்ரபுவே! |
|
என்னுடைய பாத்த்தால் யான் அளப்ப |
– |
என் காலடியால் நாளே அளந்து கொள்ளும்படி |
|
மூ அடி மண் தருக என்று |
– |
மூவடி நிலம் கொடு என்று |
|
வாய் திறப்ப |
– |
வாய் திறந்து கேட்க, |
|
அவனும் |
– |
(அதுகேட்ட) அந்த மாவலியும் |
|
என்னால் தரப்பட்டது என்றலும் |
– |
அப்படியே என்னால் மூவடி நிலம் கொடுக்கப்பட்டது என்று சொல்ல |
|
அத்துணைக் கண் |
– |
அந்த க்ஷணத்திலேயே |
|
மின் ஆர் மணி முடி போய் விண் தடவ |
– |
விளங்குகின்ற மணிமகுடம் ஆகாசத்தே போய் அளாவ, |
|
மேல் எடுத்த |
– |
உயரத்தூக்கியருளின |
|
பொன் ஆர் களை கழல் கால் |
– |
பொன்கள் நிறைந்து சப்திக்கின்ற வீரத்தண்டை யணிந்த திருவடி |
|
ஏழ் உலகும் போய் கடந்து |
– |
மேலுலகங்களெல்லாவற்றையும் தாண்டி |
|
அங்கு ஒன்னா அசுரர் துளங்க |
– |
அந்தயாக பூமியிலுள்ள (நமுசி முதலிய) பகையசுரர்கள் துன்பப்படும்படி |
|
செல நீட்டி |
– |
(மேலே) நெடுகவியாபிக்கச் செய்து |
|
மா வலியை வஞ்சித்து |
– |
(இவ்வகையாலே) மஹாபலியை வஞ்சித்து |
|
மன்னும் இ அகல் இடத்தை |
– |
நித்யமாய் விசாலமான இப்பூ மண்டலத்தை |
|
தன் உலகம் ஆக்குவித்த தாளானை |
– |
தன்னுடைய லோகமாகவே ஆக்கிக்கொடுத்த திருவடிகளை யுடையனாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அத்துணைக்கண் – துணை –அளவு, அவ்வளவில் என்றபடி.
