மின்னிவ் வகலிடத்தை மாமுதுநீர் தான்விழுங்க,
பின்னுமோர் ஏனமாய் புக்கு வளைமருப்பில்,
கொன்னவிலும் கூர்_திமேல் வைத்தெடுத்த கூத்தனை,
பதவுரை
|
மன்னு இ அகல் இடத்தை |
– |
எல்லாரும் பொருந்தி யிருக்கின்ற விசாலமான இப்பூமியை |
|
மா முது நீர் விழுங்க |
– |
மஹா ஸமுத்ரம் விழுங்கிவிட |
|
பின்னம் |
– |
அதற்கு பிறகு |
|
ஓர் எனம் ஆய் புர்கு |
– |
ஒரு திவ்யவராஹமாய் (கடலினுள்ளே) பிரவேசித்து |
|
வளை மருப்பின் |
– |
வளைந்த கோட்டினுடைய |
|
கொல் நவிலும் கூர் நுதி மேல் |
– |
(பகவரைக்) கொல்ல வல்ல கூர்மையான நுனியின் மீது |
|
வைத்து எடுத்து கூத்தனை |
– |
(அந்தப்பூமியை) வைத்துக் கொணர்ந்த அழகிய சேஷ்டித்த்தையுடையனாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வைத்தெடுத்த கூத்தனை –பூமியைக் கோட்டின் நுனியில் வைத்துக்கொண்டு எழுந்தருளும் போது அகமகிழ்ச்சி தோற்றக் கூத்தாடிக்கொண்டே யெழுக்கருளின்ன்போலும்.
மன்னும் வடமலையை மத்தாக மாசுணத்தால்
மின்னும் இருசுடரும் விண்ணும் பிறங்கொளியும்
தன்னின் உடனே சுழல மலைதிரித்து,ஆங்கு
இன்னமுதம் வானவரை யூட்டி, அவருடைய
மன்னும் துயர்க்கடிந்த வள்ளலை,….. (2767)
பதவுரை
|
மன்னும் வடமலையை |
– |
அழுத்தமாக நாட்டப்பட்ட மந்தரகிரியை |
|
மத்து ஆக |
– |
மத்தாகக்கொண்டு |
|
மாசுணத்தால் |
– |
(வாசுகி யென்னும்) பாம்பினால் (சுற்றி) |
|
மின்னும் இரு சுடரும் விண்ணும் பிறங்கு ஒளியும் தன்னினுடனே சுழல மலை திரித்து |
– |
விளங்குகின்ற சந்திர ஸூர்யர்களும் ஆகாசமும், ப்ரகாசிக்கின்ற (மற்றும் பல) தேஜ பதார்த்தங்களும் தன்னோடு சுழலும்படி அந்த மந்தர மலையைச் சுழற்றி (கடலைக்கடைந்து) |
|
வானவரை இன் அமுதம் ஊட்டி |
– |
தேவர்களுக்கு இனிய அமிருத்த்தை உண்ணக் கொடுத்து |
|
அவருடைய |
– |
அத் தேவர்களுடைய |
|
மன்னும் துயர் கடிந்த |
– |
நெடுநாளைய துக்கத்தைப் போக்கடித்த |
|
வள்ளலை |
– |
பரம உதாரனாய் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மாசுணம் என்று பாம்புக்கும் பெரிய பாம்புக்கும் பெயர். கடலைக்கடைய மந்தரமலையைச் சுற்றின போது அது சுழன்ற விசையின் மிகுதியினால் இரு குடர் விண் முதலிய ஸகல பதார்த்தங்களும் கூடவே சுழன்வனபோலத் தோற்றினமைபற்றி “மின்னுமிருசுடரும் தன்னினுடனே சுழல மலைதிரித்து“ ஒன்றார்.
