5 – 1 வாக்கு

(433)

வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று

மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.

விளக்க உரை

(434)

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்துகை யானே பிழைப்ப

ராகிலும் தம்மடி யார்சொல் பொறுப்ப தும்பெரி யோர்கட னன்றே விழிக்கும்

கண்ணிலேன் நின்கண்மற் றல்லால் வேறொ ருவரோடு என்மனம் பற்றாது

உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந் தானே.

விளக்க உரை

(435)

நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நார ணாஎன்னும் இத்தனை யல்லால்

புன்மை யால்உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வா னன்றுகண் டாய்திரு மாலே

உன்னு மாறுஉன்னை ஒன்றும் அறியேன் ஓவா தேநமோ நாரணா என்பன்

வன்மை யாவதுஉன் கோயிலில் வாழும் வைட்ட ணவனென்னும் வன்மைகண் டாயே.

விளக்க உரை

(436)

நெடுமை யால்உல கேழு மளந்தாய் நின்ம லாநெடி யாய்அடி யேனைக்

குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறை சோறுஇவை வேண்டுவ தில்லை

அடிமை யென்னுமக் கோயின்மை யாலே அங்கங் கேஅவை போதரும் கண்டாய்

கொடுமைக் கஞ்சனைக் கொன்றுநின் தாதை கோத்த வன்தளை கோள்விடுத் தானே.

விளக்க உரை

(437)

தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடவை யும்கிண றும்இவை யெல்லாம்

வாட்ட மின்றிஉன் பொன்னடிக் கீழே வளைப்ப கம்வகுத் துக்கொண் டிருந்தேன்

நாட்டு மானிடத் தோடுஎனக்கு அரிது நச்சு வார்பலர் கேழலொன் றாகி

கோட்டு மண்கொண்ட கொள்கையி னானே குஞ்ச ரம்வீழக் கொம்பொசித் தானே.

விளக்க உரை

(438)

கண்ணா நான்முக னைப்படைத் தானே கார ணாகரி யாய்அடி யேன்நான்

உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை ஓவா தேநமோ நாரணா வென்று

எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுஉன் பாதம்

நண்ணா நாள்அவை தத்துறு மாகில் அன்றுஎ னக்குஅவை பட்டினி நாளே.

விளக்க உரை

(439)

வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை மெத்தை யாகவிரித்து அதன்

மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காண லாங்கொல்என் றாசையி

னாலே உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்க ளாய்கண்ண நீர்கள்

துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான்உன்னைத் தத்துறு மாறே.

விளக்க உரை

(440)

வண்ண மால்வரை யேகுடை யாக மாரி காத்தவ னேமது சூதா

கண்ண னேகரி கோள்விடுத் தானே கார ணாகளி றட்டபி ரானே

எண்ணு வாரிட ரைக்களை வானே ஏத்த ரும்பெருங் கீர்த்தியி னானே

நண்ணி நான்உன்னை நாள்தொறும் ஏத்தும் நன்மை யேஅருள் செய்எம்பி ரானே.

விளக்க உரை

(441)

நம்ப னேநவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய்

உம்பர் கோனுல கேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழிமுன் னேந்தி

கம்ப மாகரி கோள்விடுத் தானே கார ணாகட லைக்கடைந் தானே

எம்பி ரான்என்னை யாளுடைத் தேனே ஏழை யேனி டரைக்களை யாயே.

விளக்க உரை

(442)

காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன்

வாம னன்என் மரகத வண்ணன் மாத வன்மது சூதனன் தன்னை

சேம நன்கம ரும்புது வையர்கோன் விட்டு சித்தன் வியந்தமிழ் பத்தும்

நாம மென்று நவின்றுரைப் பார்கள் நண்ணு வார்ஒல்லை நாரண னுலகே.

விளக்க உரை

Leave a Reply

Your email address will not be published.

  • No categories

Dravidaveda

back to top