(438)
கண்ணா நான்முக னைப்படைத் தானே கார ணாகரி யாய்அடி யேன்நான்
உண்ணா நாள்பசி யாவதொன் றில்லை ஓவா தேநமோ நாரணா வென்று
எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண்மலர் கொண்டுஉன் பாதம்
நண்ணா நாள்அவை தத்துறு மாகில் அன்றுஎ னக்குஅவை பட்டினி நாளே.
பதவுரை
| காரணா |
– |
(லோகஸருஷ்டிக்குக் காரணமானவளே!) |
| நான்முகிலை |
– |
பிரமனை |
| படைத்தானே |
– |
(உத்திமேல்) |
|
படைத்தருளினவளே! |
||
| கண்ணா |
– |
கண்ணபிரானே! |
| கரியாய் |
– |
காளமேகம்போல்) கறுத்த நிறத்தையுடையவனே! |
|
அடியேன் நான் (உனக்கு) சேக்ஷபூதனான நான் |
||
| உண்ணா நாள் |
– |
உண்ணாதொழிந்தபோது |
| பசிஆவ தொன்றுமில்லை |
– |
பசி என்பது மறைத்துமுண்டாவதில்லை. |
| ஓயாதே |
– |
இடைவிடாமல் |
| நமோ நாராயணா என்று |
– |
‘நமோ நாராயணாய’ என்று |
| எண்ணா நாளும் |
– |
அநுஸந்திக்கப்பெறாதநாளும் |
| இருக்கு எது சாமவேதம் |
– |
ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை (ச்சொல்லிக்கொண்டும்) |
| நான் மலர் கொண்டு |
– |
அப்போதலர்ந்த (புதிய) பூக்களை எடுத்துக் கொண்டும் (வந்து) |
| உன் பாதம் |
– |
உன் திருவடிகளை |
| கண்ணா நான் |
– |
கிட்டப் பெறாத நாள்களும் |
| அவை |
– |
(எனக்கு) அந்த உண்ணாதொழிந்த நாள்களாம்; |
| அவை |
– |
அந்த வேதாசந்தநமும் புஷ்பஸமர்ப்பணமும் |
| தத்துவம் ஆகில் |
– |
தட்டுப்படுமாகில் |
| அன்று |
– |
அந்த நாளானது |
| எனக்கு |
– |
எனக்கு |
| பட்டினி நாள் |
– |
உண்ணாதொழிந்த நாளாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***-தராகபோஷநங்களெல்லாம் எம்பெருமான் திருவடிகளே” என்று கீழ் அருளிச்செய்ததை இப்பாட்டில் விசதமாக்கி நிகமித்தருளுகிறார். இவ்வுலகத்திலுள்ளாரனைவரும் ஒருபொழுது உண்ணாதொழிந்தால், பசியினால் மிகவும் தளர்ந்து வருந்துவார்கள்; அடியேனுடைய இயல்பு அங்ஙனெத்ததன்று; திருமந்திரத்தை அநுஸந்திக்கப் பெறாதநாளும், தொழுது முப்போது முன்னடிவணங்கித் தக்ஷமலர் தூய்த்தொழுது ஏத்தப்பெறாத நாளுமே அடியேனுக்கு உண்ணாநாள்; இவ்விரண்டும் அடியேனுக்கு வாய்க்கப்பெற்ற நாள் உண்டநாள், அப்படி நிரப்பாதநாள் பட்டினிநாள்’ என்கிற வயஸஸ்தை என்னிடத்தில்லை; நான் வயிறார உண்டபோதிலும், திருமந்ராதுஸந்தாகமும் ஸ்ரீபாதஸேவையும் தட்டுப்பட்டதாகில், அந்நாள் எனக்குப் பட்டினிநாளே என்றவாறு.
இருக்கேசுச் சாமவேதம் – ***- மென்ற வடமொழித்தொடரின் விகாரம். தத்துறதல்- வாய்க்கப்பெறா தொழிதல் … (கூ)
அவை- அந்தகாள்கள், தத்துவமாகில- நேரிடுமானால், என்றுமுரைக்கலாம். கருத்து ஒன்றே
English Translation
My Lord Krishna! Creator of Brahma! O First-cause, Dark Lord! This bonded serf has never starved for want of food even one day. If ever there comes a day when I do not contemplate on the Mantra-flowers culled from the Rig, Yajus and Sama Vedas that indeed will be a day of starvation for me.
