(442)

(442)

காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன்

வாம னன்என் மரகத வண்ணன் மாத வன்மது சூதனன் தன்னை

சேம நன்கம ரும்புது வையர்கோன் விட்டு சித்தன் வியந்தமிழ் பத்தும்

நாம மென்று நவின்றுரைப் பார்கள் நண்ணு வார்ஒல்லை நாரண னுலகே.

பதவுரை

காமர் தாதை

மன்மதனுக்குத் தந்தையும்
கருதலர் சிங்கம்

(தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்குச் சிக்கல் போன்றவனும்
காண

ஸேவிப்பதற்கு
இனிய

அழகாயிருக்கிற
கரு குழல் குட்டன்

கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும்
வாமனன்

வாமாநாவதாரம் செய்தருளியவனும்
என்

எனக்குத் தலைவனும்
மாதகம் வண்ணன்

மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும்
மாதவன்

பிராட்டிக்குக் கண்வனும்
மதுசூதனன் தன்னை

மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த
சேமம்

க்ஷேமமானது
நன்கு

நன்றாக (குறைவின்றி)
அமரும்

அமைந்திருக்கப்பெற்ற
புதுவையர் கோன்

ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான
விட்டு சித்தம்

பெரியாழ்வாரது
வியன் தமிழ்பத்தும்

பெருமையுள்ள (இத்) தமிழ்ப்பாசுரங்கள் பத்தையும்
நாமம் என்று

(எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்திபண்ணி
நவின்று

அன்புகொண்டு
உரைப்பார்கள்

ஓதுமவவர்கள்
ஒல்லை

விரைவாக
நாரணன் உலகு

ஸ்ரீவைகுண்டத்தை
நண்ணுவார்

கிட்டப்பெறுவர்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மற்றைத்திருமொழிகளிற் காட்டில் இத்திருமொழியில் எம்பெருமானுடைய திருநாமங்கள் விசேஷமாக அருளிச்செய்யப்பட்டிருப்பதனால், இத் திருமொழியை ஸஹஸ்ர நாமத்யாயத்தோடொக்கப் பிரதிபத்தி பண்ணுதல் எற்குமென்க. (காமர் தாதை) ருக்மிணிப்பிராட்டியினிடத்து மந்மதனுடைய அம்சமாகப் பிறந்த பிரத்யும்நனுக்குக் கண்ணபிரான் தந்தையாதல் அறிக. மரதகவண்ணன்- வடசொற்றொடர்த்திரிபு. ‘மதுசூதன்றன்னை” என்றும் ஓதுவர். சேமம் நன்று அமருகையாவது – எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதில் மிக்க ஆவல் கொண்டிருக்கை.     …    ….    … (க0)

English Translation

This decad of sweet Tamil songs by Vishnuchitta, King of prosperous Puduvai town, in praise of the Lord who is kamadeva’s father, lion against disbelievers, beautiful dark-tressed lad Vamana, emerald-hue Madhava, Madhusudana, will confer the bliss of Narayana’s world on those who recite it as a Mantra.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top