(441)

(441)

நம்ப னேநவின் றேத்தவல் லார்கள் நாத னேநர சிங்கம தானாய்

உம்பர் கோனுல கேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழிமுன் னேந்தி

கம்ப மாகரி கோள்விடுத் தானே கார ணாகட லைக்கடைந் தானே

எம்பி ரான்என்னை யாளுடைத் தேனே ஏழை யேனி டரைக்களை யாயே.

பதவுரை

நம்பனே

(ரக்ஷகன் என்று) நம்பத்தகுந்தவனே!
நவின்று ஏத்த உல்லார்கள் நாதனே

(ஸ்தோத்திரங்களை) வாயாரச்சொல்லிப் புகழவல்லவர்களுக்கு ரக்ஷகனே!
நரசிங்கம் அது ஆனாய்

நரஹிம்க்ஷாவதராஞ் செய்தருளினவனே!
உம்பர்

நித்யஸூரிகளுக்கு
நொன்

தலைவனே!
உலகு ஏழும்

எல்லா வுலகங்களையும்
அளந்தாய்

(திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்துகொண்டவனே!
ஊழி ஆயினாய்

காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே!
முன்

முன்னே
ஆழி

திருவாழியாழ்வானை
ஏத்தி

(திருக்கையில்) ஏந்திக்கொண்டு

(எழுந்தருளி)

மா கம்பம்

மிக்க நடுக்கத்தை அடைந்த
கரி

கஜேன்திராழ்வானுடைய
கோள்

சிறையை
விடுத்தானே

விடுத்தருளினவனே!
காரணா

ஜகத்காரண பூதனே!
கடலை

(திருப்பாற்) கடலை
கடைந்தானே

(தேவர்கடகாகக்) கடைந்தருளினவனே!
எம்பிரான்

எம்பிரானே!
என்னை

அடியேனை
ஆளுடை

ஆட்படுத்திக்கொண்டவனும்
தேனே

தேன்போல் இனியனுமானவனே!
ஏழையேன்

(உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய
இடரை

துன்பத்தை
களையாய்

களைந்தருளவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உன் திருவடிகளில் நிரந்தர ஸேவை பண்ணுதற்கு விரோதியான பாபங்களைப் போக்கியருள வேணுமென்று எம்பெருமானை இரக்கிறார். ‘நரசிங்கம்தானாய்’ என்பது- எம்பெருமானைத் தவிர மற்றையோரை நம்பக் கூடாமைக்கும் அன்புகொண்டு ஏத்துமவர்களைக் காக்கின்ற பெருமானது தலைமைக்கும் உதாரணமாகும். “உம்பர்கோ னுலகேழுமளந்தாய்” என்பதை ஒருவாக்கியமாகவே அந்வயித்து, இந்திரனுக்காக ஏழுலகங்களையு மளந்தவனே! என்றும், பிரமனது ஏழுலகங்களையு மளந்தவனே! என்று முரைக்கலாம்…. (கூ)

English Translation

O Faith, O Lord of praiseworthy poets, O Lord who became a man-lion, O Lord who measured the seven worlds, O Lord of Time, O Lord who wielded the discus and saved the elephant-in-distress, O First-cause, O Lord who churned the ocean, my Lord sweet as Lord who churned the ocean, my Lord sweet as honey! Pray rid this poor wretched self of misery.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top