(443)
நெய்க்குடத் தைப்பற்றி ஏறும் எறும்புகள் போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெறஉய்யப் போமின்
மெய்க்கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார்
பைக்கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே.
பதவுரை
| நெய்க்குடத்தை |
– |
நெய் வைத்திருக்கும் குடத்தை |
| பற்றி |
– |
பற்றிக்கொண்டு |
| ஏறும் |
– |
(அக்குடத்தின்மேல்) ஏறுகின்ற |
| எறும்புகள் போல் |
– |
எலும்புகளைப் போல் |
| எங்கும்மிரந்து |
– |
என்னுடைய உடம்பு முழுவதும் பாலி |
| கைக்கொண்டு |
– |
(என்னை) வசப்படுத்தி |
|
நிற்கின்ற (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற |
||
| நோய்காள் |
– |
வியாதிகளே! |
| காலம்பெற |
– |
விரைவாக |
|
உய்ய (நீங்கள்) பிழைக்க வேண்டி |
||
| போமின் |
– |
(என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய்விடுங்கள் |
| வேதம் பிரானார் |
– |
(பிராமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான். |
| பைக் கொண்ட |
– |
பரம்பினை படங்களையுடைய |
| பாம்பு அணையோடும் |
– |
திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட |
|
எந்து புகுந்து எழுந்தருளி |
||
| மெய் |
– |
(எனது) சரீரத்தை |
| கொண்டு |
– |
(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம்பற்றி |
| கிடந்தார் |
– |
(என் சரீரத்தை |
| கொண்டு |
– |
(தனக்கு இனிதாகத்) திருவுள்ளம்பற்றி |
| கிடந்தார் |
– |
(என் சரீரத்தினுள்ளே) பள்ளிகொண்டிரா நின்றார், ஆதலால் |
| பட்டினம் |
– |
(அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இல்லலாத்துமா |
| பண்டு அன்று |
– |
பழைய நிலைமையை உடையதன்று; |
|
காப்பு (அவனால்) காக்கப்பெற்றது. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அந்நிஹோத்ரஸமாராதநாதிகளுக்கு உதவும்படி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நெய்க்குடத்தை எறும்புகள் ஏறி ஆக்கிரமிப்பது போல, எம் பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகைக்கென்று சேமிக்கப்பட்டிருக்கின்ற எனது உடலை ஆக்கிரமித்துக்கொண்டு, நான் உங்களுக்கு வசப்பட்டு ஒழுகும்படி என்னைக் கையாளாக்கிக்கொண்டு சாச்வதப்ரதிஷ்டையாக நின்றின்ற நோய்களே! இனி இவ்வாத்துமா உங்களுடைய ராஜ்யமன்று; இத்தனை நாளும்போல்ல இந்நாள்; எம்பெருமான் தனது படுக்கையோடுங்கூட விரும்பிப் பள்ளிகொண்டிருக்குமிடமாயிற்று இன்று இவ்வாத்துமா; ஆன பின்பு, அவனது காவலில் அகப்பட்ட இவ்வுடலிடத்து இனி உங்களுக்குப் பிழைத்திருக்க வழியில்லை; இன்னுஞ் சில நாளளவும் பிழைத்திருக்கு வேணுமொன்றவிருப்ப முங்களுக்கு உளதாகில்,இவ்விடத்தைவிட்டுச் சடக்கென ஓடிப்போங்கள் என்கிறார்கள்.
“பாம்பனையோடும் வந்து புகுந்துகிடந்தார்” என்றதனால், நித்யவாஸத்துக்காக எழுந்தருளினமை விளங்கும். பட்டினம்- வதந மென்ற வடசொல் விகாரம்; ராஜதாநி என்பது பொருள்; ஆத்துமா எம்பெருமானுடைய ராஜதானியாதலறிக.
English Translation
O Ye sicknesses that plague the soul like a swarm of ants over a pot of Ghee! Flee and save yourselves. The Lord of the Vedas has entered my body and made it his abode, reclining on a serpent bed. No more like old, the fortress is on guard!
