(440)

(440)

வண்ண மால்வரை யேகுடை யாக மாரி காத்தவ னேமது சூதா

கண்ண னேகரி கோள்விடுத் தானே கார ணாகளி றட்டபி ரானே

எண்ணு வாரிட ரைக்களை வானே ஏத்த ரும்பெருங் கீர்த்தியி னானே

நண்ணி நான்உன்னை நாள்தொறும் ஏத்தும் நன்மை யேஅருள் செய்எம்பி ரானே.

பதவுரை

காரணா

(உலகங்கட்குக்) காரணமானவனே!
என்ணுவார் இடரை களைவானே

(எப்போதும் உன்னையே தியானிப்பவர்களுடைய துன்பங்களைப்  போக்குமவனே!
மது சூரா

மதுவைக் கொன்றவனே!
கரி கோள் விடுத்தானே

கஜேந்திராழ்வானுடைய துக்கத்தை நீக்கினனனே!

கண்ணனே!

வண்ணம்

அழகிய
மால்

பெரிய
வரை

கோவர்த்தன மலை
குடை ஆக

குடையாக (அமைய)
மாரி

மழையினின்றும்
கர்த்தவனே

(பசுக்களையும் இடைகரையும்) காத்தருனவனே!
களிறு

(குவலயாபீடமென்னும்) யானையை
அட்ட

முடித்த
பிரானே

உபகாரகனே!
ஏத்த அரு பெரு கீர்த்தியினானே

துதிக்கமுடியாத அளவற்ற கீர்த்தியையுடையவனே!
எம்பிரானே

எமக்குத் தலைவனே!
நான்

அடியேன்
உன்னை

உன்னை
நாள்தொறும்

தினந்தோறும்
நண்ணி

ஆச்ரயித்து
ஏத்தும் நன்மை

துதிக்கையாகிற நன்மையை
அருள் செய்

அருள்செய்யவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அட்ட – அடு என்ற குறிலினைப் பகுதியாகப் பிறந்த

பெயரெச்சம். ஏத்த+அரு, ஏத்தரு; தொகுத்தல் விகாரம் “நன்மையே அருள் செய்யும் பிரானே” என்றம் பாடமுண்டு; “அருள் செய்யும்” என்பதற்குப் பொருளதுவே: “பல்லோர்படர்க்கை முன்னிலை தன்மையிற், சொல்லாதாகுஞ் செய்யுமென முற்றே” என்ற இலக்கணத்தின்படி ‘நீர் செய்யும்’ என முன்னிலையிற் பன்மையேவலாய் வருதல் ஒவ்வாதாயினும், இது புதியன புகுதலெனக் கொள்க.

English Translation

O Lord who held aloft a mount as a shield against a hailstorm, O Madhusudana, O Krishna, O Lord who saved the elephant Gajendra in distress, O Lord who killed the rutted elephant Kuvalayapida. O First-cause, O Refuge of devotee, O Lord of glory beyond praise, pray grant me the joy of worshipping you everyday.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top