(3248)
மடந்தையை வண்கம லத்திரு மாதினை,
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,
வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.
பதவுரை
|
வாள் நுதலீர் |
– |
ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்! |
|
என் மட கொம்பு இவள் |
– |
இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை |
|
மடந்தையை |
– |
இளமைப் பருவமுள்ள |
|
வண் கமலம் திரு மாதினை |
– |
அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை |
|
தடம் கொள் தார் மார்பினில் |
– |
விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே |
|
வைத்தவர் |
– |
(பாற்கடல் கடைந்த காலத்து ஏற்றுக்கொண்ட பெருமானுடைய |
|
தாளின் மேல் |
– |
திருவடிகளின்மீது (சாத்தின) |
|
வடம் கொள் |
– |
செறியத் தொடுக்கப்பட்டதும் |
|
பூ |
– |
அழகியதும் |
|
தண்ணம் |
– |
குளிர்ச்சி பொருந்தியதுமான |
|
துழாய் மலர்க்கே |
– |
திருத்துழாயின் பொருட்டே |
|
மடங்கும் |
– |
சுருண்டு விழுகின்றாள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள்.
மூலத்தில்இ அம்ருமதன காலமென்பதற்கு வாசகமான சொல்; இல்லையாகிலும் “திருமாதினை மார்பினில் வைத்தவர்” என்கிற சொல்லமைப்பை நோக்கி “அம்ருதமதந தசையிலே” என்று பூருவசாசாரியர்க்ள உரைத்தருளினர். பிராட்டியைத் திருமார்பிலே கொண்டிருப்பவன் என்னாமல் ‘வைத்தவர்’ என்கையாலும், ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு அவதாரம் ப்ரஸ்துதமாகிவருகிற அடைவுக்குச் சேரவேண்டுகையாலும் இங்ஙனமுரைத்தல் மிகப்பொருந்தும்.
English Translation
O Ladies of radiant forehead! My foolish daughter pines away for the cool fragrant Tulasi garland on the feet of the Lord, -who bears the lotus-dame Lakshmi on his chest
