(3248)

(3248)

மடந்தையை வண்கம லத்திரு மாதினை,

தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,

வடங்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்

மடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.

 

பதவுரை

வாள் நுதலீர்

ஒளி பொருந்திய நெற்றியையுடைய பெண்காள்!

என்  மட கொம்பு இவள்

இளங்கொடி போன்ற எனது இப்பெண்பிள்ளை

மடந்தையை

இளமைப் பருவமுள்ள

வண் கமலம் திரு மாதினை

அழகிய தாமரைப்பூவிற் பிறந்த பிராட்டியை

தடம் கொள் தார் மார்பினில்

விசாலமானதும் மாலையணிந்ததுமான திரு மார்பிலே

வைத்தவர்

(பாற்கடல் கடைந்த காலத்து ஏற்றுக்கொண்ட பெருமானுடைய

தாளின் மேல்

திருவடிகளின்மீது (சாத்தின)

வடம் கொள்

செறியத் தொடுக்கப்பட்டதும்

பூ

அழகியதும்

தண்ணம்

குளிர்ச்சி பொருந்தியதுமான

துழாய் மலர்க்கே

திருத்துழாயின் பொருட்டே

மடங்கும்

சுருண்டு விழுகின்றாள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அமுதமளிக்கக் கடல்கடைந்த காலத்துப் பெரிய பிராட்டியாரைத் திரு மார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளில் திருத்துழாயை என்மகள் ஆசைப்படுகின்றாளென்கிறாள்.

மூலத்தில்இ அம்ருமதன காலமென்பதற்கு வாசகமான சொல்; இல்லையாகிலும் “திருமாதினை மார்பினில் வைத்தவர்” என்கிற சொல்லமைப்பை நோக்கி “அம்ருதமதந தசையிலே” என்று பூருவசாசாரியர்க்ள உரைத்தருளினர்.  பிராட்டியைத் திருமார்பிலே கொண்டிருப்பவன் என்னாமல்  ‘வைத்தவர்’ என்கையாலும், ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு அவதாரம் ப்ரஸ்துதமாகிவருகிற அடைவுக்குச் சேரவேண்டுகையாலும் இங்ஙனமுரைத்தல் மிகப்பொருந்தும்.

 

English Translation

O Ladies of radiant forehead! My foolish daughter pines away for the cool fragrant Tulasi garland on the feet of the Lord, -who bears the lotus-dame Lakshmi on his chest

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top