(3249)
கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்.
பதவுரை
|
நங்கைமீர் |
– |
பெண்காள்! |
|
கொம்பு போல் சீதை பொருட்டு |
– |
பூங்கொடி போன்ற ஸீதாபிராட்டியின் பொருட்டு |
|
இலங்கை நகர் |
– |
இலங்காபுரியில் |
|
அம்பு ஏரி |
– |
அம்புகளில் நின்றும் கிளம்பும் அக்னியை |
|
உய்த்தவர் |
– |
செலுத்தின இராமபிரானுடைய |
|
தாள் இணைமேல் |
– |
உபயபாதங்களின் மீது |
|
அணி |
– |
சாத்தின |
|
வம்பு அவிழ் தண் ஆம் துழாய் மலர்க்கே |
– |
பரிமளப்ரசுரமாய்க் குளிர்ந்தழகிய திருத்துழாயின் மீதே |
|
இவள் நம்பும் |
– |
இவள் ஆசைப்படா நின்றாள்; |
|
இதற்கு நான் என் செய்வேன் |
– |
இதற்கு நான் என்ன பரிஹாரம் செய்வது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸீதாபிராட்டிக்காக இலங்கை பாழாளாகப் படைபொருத பெருமானது திருவடிகளில் திருத்துழாயை என்மகள் விரும்பா நின்றாளென்கிறாள். கொம்பு போல்சீதைபொருட்டு ஸ்த்ரீகளைக் கொம்பனார் என்று கூறுவது தமிழர் மரபு; வஞ்சிக் கொம்புபோல் மிக்க பெருந்தன்மை பொருந்தியிருக்கும்படியைக் கூறியவாறு. கொம்புபோல் என்பதற்கு மற்றொரு பொருளும் நம்பிள்ளை அருளிச் செய்வதுண்டு; “’அநந்யா’ என்கிறபடியே ஏகவஸ்துவில் ஏகதேசமென்னுதல்” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. கொம்பானது வ்ருக்ஷத்தில் ஏகதேசமாகவுள்ளது; “வாஸூதேவதரு” என்றும், “எனக்கே தன்னைத்தந்த கற்பகம்” என்றும் வ்ருக்ஷமாகச் சொல்லப்படுகிறபடியால் அதில் ஏகதேசமான கொம்பாகப் பிராட்டியைச் சொல்லுதல் பொருந்தும்.
சீதை-ஸீதா என்ற வடசொல் திரிபு. (ஸீதா லாங்கலபத்ததி:) என்ற நிகண்டின்படி உழுபடைக்கு ஸீதா என்று பெயராதலால் ஜநகசக்ரவர்த்தியின் யாகசாலை நிலத்தில் உழுபடை பட்டவிடத்தில் நின்றும் பிராட்டி தோன்றின காரணம்பற்றி அவளுக்கு இலக்கணையினால் ஸீதையென்று பெயராயிற்று.
நம்பும்-விருமபும்; “நம்பும் மேவும் நசையாகும்மே.”
English Translation
O Ladies, what shall I do? She covets only the fragrance-wafting Tulasi garland on the feet of the Lord, -who gutted Lanka with his arrows, for the love of beautiful Sita
