(3247)
மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே
பதவுரை
|
மா மாதர் |
– |
சிறந்த அழகுடைய |
|
மண் மடந்தை பொருட்டு |
– |
பூமிப் பிராட்டிக்காக |
|
ஆதி அம் காலத்து |
– |
முன்னொரு காலத்தில் |
|
எனம் ஆய் |
– |
வராஹ மூர்த்தியாய் |
|
அகல் இடம் |
– |
விபுலமான பூமண்டலத்தை |
|
கீண்டவர் |
– |
பிளந்தெடுத்துக் கொணர்ந்த பெருமானுடைய |
|
பாதங்கள்மேல் |
– |
திருவடிகளின்மீது |
|
அணி |
– |
சாத்தின |
|
பைம் பொன் துழாய் என்றே |
– |
மிகவழகிய திருத்துழாயென்றே |
|
ஓதும் மால் |
– |
ஓதும்படியான வியாமோஹத்தை |
|
என் தன் மடந்தை |
– |
எனது பெண் பிள்ளை |
|
எய்தினள் |
– |
அடைந்தாள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீ வராஹ மூர்த்தியாய் ப்ரளயார்ணவத்தில் பூமியை யெடுத்தருளின போது திருவடிகளிலணிந்திருந்த திருத்துழாயைப் பெறவேணுமென்று ஆசைப்படுகின்றாளென்மகளென்கிறாள்.
“ஆதிகாலத்து” என்னாமல் “ஆதியங்காலத்து”; என்றதற்கு நம்பிள்ளை தாற்பரியமருளிச் செய்கிறார்-“ரக்ஷகனானவன் தன் விபூதிரக்ஷணத்துக்காகக் கொண்ட கோலத்தை அநுபவிக்கிற காலமாகையாலே அழகிய காலமென்கிறார்” என்று.
“அகலிடங்கீண்டவர் பாதங்கள் மேலணி பைம்பொற்றுழாய்”
என்கிறாரே; அகலிடங்கீண்டபோது திருவடிகளில் திருத்துழாய் அணியப் பெற்றதுண்டோ வென்னில், உண்டு. “உத்திஷ்டதஸ் தஸ்ய ஜலார்த்ரகுக்ஷே: மஹாவராஹஸ்ய மஹீம் ப்ரக்ருஹ்ய, விதுர்ந்வதோ வேதமயம் சரீரம் ரோமாந்தரஸ்தா முநய: ஸ்வாந்தி.” என்று ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் (1-4-29) கூறப்பட்டிருத்தலால் அப்போதும் ஸநகாதி மஹர்ஷிகள் இட்ட திருத்துழாய் உண்டு என்றுணர்க. மேற்காட்டிய ச்லோகத்தில் “ஸ்துவந்தி” என்று ஸ்துதியைச் சொல்லியிருப்பது புஷ்பாஞ்ஜலி ஸமர்ப்பணத்திற்கும் உபலக்ஷணமாகும்.
இப்பதிகத்தில் பெரும்பாலும் பாசுரந்தோறும் “மாலுமால்” “கூவுமால்” “ஓதுமால்” “மடங்குமால்” “நம்புமால்” என்றிங்ஙனே வருகின்றது; இச்சொற்றொடர்களில் ;ஆல் என்பது அசையாகும். இப்பாசுரத்தில் மாத்திரம் ஓதுமால் என்ற சொற்றொடரில் ஆல என்று இல்லை; ‘ஓதும் மால்’ என்று பிரியும்; ஓதும்படியான பைத்தியத்தை யடைந்தாளென்றபடி.
மடந்தை-மகளிர் பருவம் எழனுள் பதினான்குமுதல் பத்தொன்பது வயது வரையுள்ள பருவத்துப் பெண்; இச்சொல் பெண் பொதுப்பெயராகவே பெரும்பாலும் வழங்கும்.
English Translation
my daughter has become made repeating her desire for the golden Tulasi on the feet of the Lord, -who took the form of a boar in the beginning of creation, and lifted beautiful Earth-dame from deluge waters
