(347)

(347)

எட்டுத் திசையும் எண்ணிறந்த பெருந் தேவிமார்

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன்மலை

பட்டிப் பிடிகள் பகடுறிஞ்சிச் சென்று மாலைவாய்த்

தெட்டித்திளைக்கும் தென்திரு மாலிருஞ் சோலையே.

பதவுரை

எண் இறந்த கணக்கிட முடியாதவர்களும்

பெரு

–

பெருமை பொருந்தியவர்களுமான
தேவிமார்

–

தேவியானவர்கள்
எட்டு திசையும்

–

எட்டுத்திக்குகளிலும்
விட்டு விளங்க

–

மிகவும் பிரகாசிக்க (அவர்கள் நடுவே)
வீற்றிருந்த

–

பெருமை தோற்ற எழுந்தருளியிருந்த
விமலன் மலை

–

நிர்மலான கண்ணபிரான் (எழுந்தருயிருக்கிற) மலையானது;
பட்டி

–

வேண்டினபடி திரியும் மலையான
பிடிகள்

–

யானைப் பேடைகளானவை
மாலைவாய்

–

இரவிலே
பகடு

–

ஆண் யானை மேல்
உரிஞ்சி சென்று

–

ஸம்லேஷித்துப்போய்
தெட்டித்திளைக்கும்

–

அந்த ஸம்லேஷித்துப்போய் முற்றிக் களியாநிற்கும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்க்கதிரா மிரவியல் “பொல்லாடிவடைப் பெய்ச்சி துஞ்ச” என்ற பாட்டின் பின்னடிகளில் கூறப்பட்டுள்ள கதை. இப்பாட்டின் முன்னடிகளில் அடங்கியுள்ள தென்க தேவிமார் எட்டுத்திசையும் விட்டு விளங்க என்றது- பார்த்த பார்த்துவிடமெங்கும் தேவிமார் திரளின் பிரகாசமேயிருக்கையைக் கூறியவாறு.

பட்டிமேய்ந்து திரியும் பெட்டையானைகள் இராக்காலங்களில் தம் தம் களிறுகளோடு புணர்ந்து, அதனாலுண்டாகும்  ரஸம் முற்றிக்  களிக்குமிடமென்று மலையின் சிறப்பைக் கூறுவது , பின்னடி (பிடி – பெண்பானை; பகடு, களிறு – ஆண் யானை.)

English Translation

Countless hordes of beautiful dames from the eight Quarters cramp the hill where the pure Lord resides. That hill is Malirumsolai where elephant-cows move hordes rubbing their sides against their bull all night and fall into rapturous delight.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top