(346)
சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு பூதங்கள்
அந்திப் பலிகொடுத்து ஆவத் தனம்செய் அப்பன்மலை
இந்திர கோபங்கள் எம்பெரு மான்கனி வாயொப்பான்
சிந்தும் புறவில் தென்திரு மாலிருஞ் சோலையே.
பதவுரை
| தங்கள் |
– |
ஸ்ரீ வைஷ்ணவ பூதங்களானவை (தேக அபாஷனமே பண்ணிக்கொண்டு திரியும் நாஸ்திரிகர்களைக் கண்டால், அவர்களை) |
| சிந்து படைத்து |
– |
(அவயங்கள்) சிதறும்படி அடித்துக்கொன்று |
| செம் குருதி கொண்டு |
– |
(அதனால் அவர்களுடலினின்று புறப்படுகிற) சிவந்த ரத்தத்தைக்கொண்டு |
| அந்தி |
– |
அந்திப்பொழுதிலே |
| பலிகொடுத்து |
– |
(எம்பெருமானுக்கு) ஆராதநரூபமாக ஸமர்ப்பித்து |
| ஆபத்து தனம் செய் |
– |
ஆபத்காலத்துக்குத் துணையாமிடமென்று ஸேவிக்குமிடமும் |
| அப்பன் |
– |
ஸ்வாமி (எழுந்தருளியிருக்க மிடமுமான) |
| மலை |
– |
மலையாவது, |
| இந்திர கோபங்கள் |
– |
பட்டுப் பூச்சிகளானவை |
| எம் பெருமான் |
– |
அனைவர்க்கும் ஸ்வாமியான அழகருடைய |
| கனி வாய் |
– |
(கொவ்வைக்) கனிபோன்ற திருவதரத்திற்கு |
| ஒப்பான் |
– |
போலியாக |
| சிந்தும் |
– |
(கண்டலிடமெங்கும்) சிதறிப் பறக்கப்பெற்ற |
| புறவில் |
– |
தாழ்வரையையுடைய |
|
தென் திருமாலிருஞ்சோலை. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பூதயோநியாயிருக்கச் செய்தேயும், வைஷ்ணவநாம ரூபங்களோடு கூடி, பகவத்பாகவத பக்தியையுடையனவாய்த் திரியும் பூதங்கள் திருமாலிருஞ் சோலைமலையிற் பல உண்டு; அவை அத்திருமலையில் யாரேனும் ஆஸ்திகர்களாக எழுந்தருளக் கண்டால், அவர்களெதிரில் நிற்கமாட்டாமல் அஞ்ஜலி பண்ணிவிட்டு மறைந்திருக்கும்; தேஹசூபோஷணமே பண்ணித்திரியும் நாஸ்திகர்களைக் கண்டால், அவர்களை அவயங்கள் சிதற அடித்துக்கொன்று, அவர்களுடைய தேஹத்தில்நின்றும் “பெருகுகின்ற ரத்தத்தைத் தம்முடைய சாதிக்குத்தக்கபடி தாம் பருகும்போது, அதனை அழகருக்கு ஆராதநரூபேண ஸமர்ப்பித்துப் பருகிக்கொண்டு, இதுவே ஆபத்துக்கு உதவுமிடமென்று இத்திருமலையிலே வாழுமென்க.
?????????????????? “சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும், இந்திரகோபங்களே யெழுந்தும் பரந்திட்டனவால்” என்றாள் ஆண்டாளும்.
English Translation
The Malirumsolai hill is haunted by spirits that kill and cut men, and spill blood, and then offer is as evening sacrifice to their “distress fund”. It is the hill where cochineal insects spill the red hue of the Lord’s coral lips every where.
