(348)

(348)

மருதப் பொழிலணி மாலிருஞ் சோலை மலைதன்னை

கருதி யுறைகின்ற கார்க்கடல் வண்ணனம் மான்தன்னை

விரதம்கொண் டேத்தும் வில்லிபுத் தூர்விட்டு சித்தன்சொல்

கருதி யுரைப்பவர் கண்ணன் கழலிணை காண்பார்களே.

பதவுரை

மருதம் பொழில்

–

மருகஞ்சோலைகளை
அணி

–

அலங்காரமாகவுடைய
மாலிருஞ்சோலைமலைதன்னை

–

திருமாலிருஞ்சோலை மலையை
கருதி

–

விரும்பி
உறைகின்ற

–

(அதில்) எழுந்தருளியிருக்கின்ற
கார் கடல் வண்ணன்

–

கருங்கடல்போன்ற நிறத்தையுடைய
அம்மான் தன்னை

–

அழகப்பிரனாரை
விரதம் கொண்டு

–

மங்கள ***

–

விரதமாகக்கொண்டு
ஏந்தும்

–

துதிக்குமாறும்
வில்லிபுத்தூர்

–

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவருமான
விட்டுசித்தன்

–

பெரியாழ்வார்.
சொல்

–

அருளிச்செய்த இவற்றை
கருதி

–

விரும்பி
உரைப்பவர்

–

ஓதமவர்கள்
கண்ணன்

–

கண்ணபிரானுடைய
கழல் இணை

–

திருவடிகளை
காண்பர்கள்

–

ஸேவிக்கப்பெறுவார்கள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழிகற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைகாட்டுகிறார், இப்பாட்டால், மருதப்பொழில்- அர்ஜுகவ்ருக்ஷங்கள். விரதம் கொண்டு- திருப்பல்லாண்டு பாடுகை என்றிறே பெரியாழ்வாருடைய விரதம்… (கக)

English Translation

These are songs by Srivilliputtur’s Vishnuchitta, who vows worship to the dark ocean-hued lord residing in the midst of forest groves of Malirumsolai hill. Those who love to sing them will see the feet of Krishna

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top