(3327)
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய். அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே.
பதவுரை
|
அரவு அணையாய் |
– |
சேஷசாயியான பெருமானே!, |
|
நீ |
– |
நீ |
|
(அபிமதரான சிலரை) |
||
|
நின் குரை கழல்கள் |
– |
ஆபரணத்வநி பொருந்திய உனது திருவடிகளிலே |
|
கூட்டுதி |
– |
சேர்த்துக் கொள்ளுகிறாய்; |
|
(திருவுள்ள மில்லையாகில்) |
||
|
இமையோரும் |
– |
(ஞானசக்திகள் நிறைந்திருக்கப் பெற்ற) தேவர்களும் |
|
தொழா வகை செய்து |
– |
கண்டு அநுபவியாதபடி பண்ணி |
|
ஆட்டுதி |
– |
அலைக்கின்றாய்; |
|
அஃது |
– |
இப்படி எளியனாயும் அரியனாயுமிருக்குந் தன்மையை |
|
அடியேனும் |
– |
நானும் |
|
அறிவன் |
– |
அறிந்தேயிருக்கின்றேன்; |
|
என்னை |
– |
எனக்குண்டான |
|
வேட்கை எல்லாம் விடுத்து |
– |
விஷயாந்தர விருப்பங்களெல்லாவற்றையும் கழித்து |
|
உன் திரு அடியே |
– |
உனது திருவடிகளையே |
|
சுமந்து உழல |
– |
நான் தலையால் சுமந்து திரியும்படி |
|
கூட்ட அரிய திரு அடிக்கண் |
– |
துர்லபமான திருவடிகளிலே |
|
கூட்டினை |
– |
சேர்த்துக் கொண்டாய்; |
|
நான் கண்டேன் |
– |
இதை ப்ரத்யக்ஷமாக அநுபவித்தேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வாருடைய ஆர்த்திதீரும்படி பரமபதத்திலிருப்பைக காட்டிக்கொடுக்க, அதுகண்டு தாம் களித்தமை கூறுகின்றது இப்பாசுரம். கூட்டுநின் குரை கழல்கள்=சிலரைத் திருவடி சேர்த்துக்கொள்ளத் திருவுள்ளம்பற்றினால், அவர்கள் எவ்வளவு தண்ணியர்களாயிருந்தாலும் தன்னுடைய சக்தியே காரணமாக அவர்களைத் திருவடி சேர்த்துக்கொள்ளுகிறாயென்கை. இன்னாரினையாரென்று பாராமல், உகந்தாரைத் திருவடி சேர்த்துக்கொள்ளுதல் உன்னுடைய இயல்வு என்றபடி.
இமையோரும் தொர்வகைசெய்து ஆட்டுதி=பிரமன் முதலிய பெரியோர்களேயாகிலும் உகப்புக்கு இலக்கு ஆகாதவர்களை வந்து கிட்டாதபடிபண்ணி அலைக்கின்றா யென்றபடி.
அடியேனும் அது அறிவன்=விருப்பமுண்டானால் சிலர்க்கு எளியனாகியும், விருப்பமில்லையாகில் சிலர்க்கு அரியனாகியும் போருகின்றா யென்கிற இந்த உன்படியை நான் அறிந்து கொண்டே யிருக்கின்றேன் என்று கூறின ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! இப்போது நீர் அறிந்துகொண்டது என்ன?’ என்று கேட்க; இப்போது என்னை நீ விஷயீகரிக்கத் திருவுள்ளம்பற்றினபடியாலே திருவடியோடே என்னைச் சேர்த்துக்கொண்டாயே!
இதுதான் நான் கண்டது என்கிறார்.
வேட்கையெல்லாம் விடுத்து=இவ்வுலகில் என்னுடைய ஆசைக்கு இலக்காகாத பொருளே இல்லை; கண்டபொருள்களிலெல்லாம் ‘எனக்கு, எனக்கு’ என்றே ஆசைவைத்துப் போந்தேன்.; அந்த ஆசைகளையெல்லாம் விடுவித்தருளினாய். அதுவன்றியும், (உன் திருவடியே சுமந்துழல) பரதாழ்வானுக்கு மரவடியைக்கொடுத்து உபச்சந்தனம் பண்ணினாய் போலன்றிக்கே ஸாகூஷாத் திருவடிகளையே என்தலைமீது வைத்தருளினாய்; இதைக் கேட்;டார்வாய்க் கேட்கையன்றிக்கே நான் அனுபவிக்கப் பெற்றேனாகையாலே அறிந்தேன்-என்றாராயிற்று.
English Translation
O Lord on serpent couch, you make even gods roam without redemption. I know this too, shearing me of my desires, you have made me bear your feet and roam, I now see that I am inseparable from your precious lotus feet!
