(3326)

(3326)

காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்,

ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்,

கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து,

கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே?

 

பதவுரை

(எம்பெருமானே)

நீ

நீ

காட்டி

படைக்கும்போது பிரகாசிப்பித்து

கரந்து

(பிரளய காலத்திலே) உள்ளே மறைத்து

உமிழுத்

மறுபடியும் வெளிப்படுத்துகின்ற

நிலம் நீர் தீ விசும்பு கால்

பஞ்ச பூதங்களையும்

ஈட்டி வைத்து

ஒன்றாகத் திரட்டி வைத்து

அமைத்த

ஒழுங்கு படுத்திய

இமையோர் வாழ தனி முட்டை

பிரமாண்டமாகிற

கோட்டையினில்

கோட்டையில் நின்றும்

என்னை கழித்து

என்னை அப்புறப்படுத்தி

உன்

உன்னுடைய

கொடு சோதி உயரத்து

மிக்க வொளியுருவமாய் எல்லாவற்றினும் உயர்ந்ததான் திருநாட்டிலே

கூட்டு அரிய

கூடுதற்கரியான

திருவடிக்கண்

திருவடிகளிலே

எஞ்ஞான்று

என்றைக்கு

கூட்டுதி

கூட்டிக்கொள்வாய்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘ஆழ்வீர்! நீர்  விரும்பியபடியே நாம் செய்கிறோம் என்று எம்பெருமான் அருளிச்செய்ய, அது என்றைக்குச் செய்வதாகத் திருவுள்ளமோ? என்கிறார்.

இப்போது ஆழ்வார் தாம் இருக்கப்பெற்ற பிரகிருதி மண்டலத்தின் தன்மையை முன்னிரண்டடிகளால் கூறுகின்றார். ஒரு காலத்திலே ஸ்ருஷ்டித்தும், ஒரு காலத்திலே பிரளயம்கொள்ளாதபடி உள்ளடக்கியும், மற்றொரு காலத்திலே மறுபடியும் வெளிப்படுத்தியும் போருகிற ஐந்து பூதங்களையும் பஞ்சீகரண ப்ரகாரத்திலே திரட்டி, இவைகொண்டு நீ சமைத்துவைத்த ப்ரஹ்மாண்டமாகிற கோட்டையில் நின்றும் என்னைப் புறப்படவிட்டு, ஸம்ஸார நாற்றம் தொட்டறியாததும் சுத்த ஸத்வமயமானதும் நிரவதிக தேஜோரூபமுமான பரமபதத்திலே திருவடிகளோடே சேர்த்துக்கொள்வது என்றைக்கோ? ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஒரு நாளிட்டுக்கொடுத்ததுபோலே அடியேனுக்கும் கொடுத்தால் ஆறியிருக்கத்தட்டில்லையே; இன்னநாளிலேயென்று ஒரு வார்த்தை யருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.

இப்பாட்டினீட்டிலே ஒரு வார்த்தை: -“பிள்ளை திருநறையூரரையர், ஒரு குருவி பிணைத்தபிணை ஒருவரால் அவிழ்க்கவொண்கிறதில்லை; ஒரு ஸர்வசக்த, கர்மாநுகூலமாகப்  பிணைத்தபிணையை அவனைக் கால்காட்டாதே இவ்வெலியெலும்பனான ஸம்ஸாரியால் அவிழ்த்துக் கொள்ளப்போமோ வென்று பணிப்பர்” என்பதாம்.

இமையோர்வாழ் தனிமுட்டை= பிரமன் முதலிய க்ஷேத்ர;ஜ்ஞவர்க்கங்கள் நிறைந்த அண்டம் என்றபடி.

 

English Translation

You show yourself and vanish, You make the world, and with it, Earth, Water, Fire, Air and sky.  May I cross the great sphere, abode of the gods, and reach your radiant high-feet! O, when will that be!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top