(3273)
அயர்க்கும்சுற் றும்பற்றி நோக்கும் அகலவே நீள் நோக்குக் கொள்ளும்,
வியர்க்கும் மழைக்கண் துளும்ப வெவ்வுயிர்க் கொள்ளும்மெய் சோரும்,
பெயர்த்தும் கண்ணா என்று பேசும், பெருமானே வாஎன்று கூவும்,
மயல்பெருங் காதலென் பேதைக் கென்செய்கேன் வல்வினை யேனே.
பதவுரை
| அயர்க்கும் |
– |
மோஹியா நிற்பாள் |
| சுற்றும் பற்றி நோக்கும் |
– |
(கண்ணன் தன்னிடத்து வாராதொழியான்று நினைத்து அவன் வருகையை) சுற்றிலும் பலகாலும் பார்ப்பாள் |
|
(அவ்வளவிலும் காணாமையினாலே அவன் துர்ரத்திலே நிற்கிறகவெண்ணி) |
||
| அகல நீள் நோக்கு கொள்ளும் |
– |
பார்த்த கண்ணை ஓட்டி நெடும்போது பாராநிற்பள் (அங்கும் காணாமையிலே) |
| வியர்க்கும் |
– |
வேர்த்து நீராக நிற்கும் |
| மழை கண் துளும்ப |
– |
மழை போலக் கண்களில் நீர் துளும்பும்படி |
| வெம் |
– |
வெவ்விதாக |
| உயிர்க்கொள்ளும் |
– |
நெடுமூச்செறிகின்றள் |
| மெய் சோரும் |
– |
(இத்தகைய பரிதாபத்தாலே) சரீரம் தரிக்க மாட்டாமல் வாடுவாள் |
| பெயர்த்தும் |
– |
பின்னையும் (ஆசைமிகுதியினாலே) |
| கண்ணா என்று பேசும் |
– |
க்ருஷ்ணனே! என்று கூப்பிடுவாள் (அவ்வளவிலே வந்தானாகவெண்ணி) |
|
பெருமானே என்னுடைய ஸ்வாமியே |
||
| வா என்று கூவும் |
– |
வரலாகாதோ? என்று அழைப்பாள் |
| மயல் |
– |
(இப்படிப்) பிச்சேறும்படி |
| பெரு காதல் |
– |
பெரிய காதலையுடையளான |
| என் பேதைக்கு |
– |
என் சொற்கேளாப் பெண்ணுக்கு |
| வல்வினையேன் |
– |
இவளை இப்படிக் கானும்படி ) கொடிய பாபத்தையுடைய நான் |
| என் செய்தேன் |
– |
என்ன செய்வேன்.? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பராங்குசநாயகியின் பலவகைப்பட்ட நிலைமைகளை யெடுத்துரைக்கின்றள் திருத்தாய். அயர்க்கும் = சிலகாலங்களிலே அறிவழிந்து கிடக்கின்றள். சுற்றும் பற்றி நோக்கும் -சில காலங்களிலே அறிவு குடிபுகுந்திருந்து தனக்குக் காட்சி தருவதற்காக எம்பெருமான் அருகே வந்திருந்தானாகக் கொண்டு மிக்க ஆவலுடனே சுற்றும் நோக்குகின்றான்;.அகலவே நீள் நோக்குக் கோள்ளும்-சுற்றும் பார்த்தும் காணாதொழிந்தவாறே பரமபதத்தில் நின்றும் இப்போதே புறப்பட்டிருக்கக் கூடும் அங்கிருந்து எழந்தருளுகிற அழகைக் காண்போம்” என்று நெடுந்துர்ரத்திரே கண்ணைவிட்டுப் பாராநின்றாள். வியர்க்கும்= அங்குங் காணப் பெறாமையாலே இளைப்பாலே வியர்வை மிகும். (மழைக்கண் இத்யாதி.) வேர்வையாய்ப் புறப்பட்டதுபோக மிகுந்தது கண்ணீராய்ப் புறப்படும்; அதிலும் மிகுந்தது நெடு மூச்சாய்ப் புறப்படும். அந்த பரிதாபத்தாரே சரீரம் தரிக்கமாட்டாமல் சோரும்; பின்னையும் ஆசை பேசாதிருக்கவொட்டாமையாலே, பெண்களுக்கு அற்றுத் தீர்ந்த க்ருஷ்ணனே! என்று கூவுகிறாள். அங்ஙனம் கூவினவாறே உருவெளிப்பாட்டாலே அவன்றான்வந்து தோன்றினனாகக் கொண்டு ‘பெருமானே! வா’ என்று அன்புதோற்ற அழைக்கின்றாள்.
மயற் பெருங்காதல் என் பேதைக்கு வல்வினையேன் என்செய்கேன்?=இவன் திறத்திலே நான் செய்யக்கூடியதான உபாயம் ஒன்றும் தோன்றவில்லையே!; இவளுடைய காதலோ கரையழிந்து கிடக்கிறது. அதுதானே வடிவுகொண்டாற்போலே யிருக்கின்ற விவளுக்கு நான் என்ன செய்யவல்லேன்? ‘இப்படியெல்லாம் நீ இருக்கத்தகாது’ என்று நான் சொன்னால் அது கேட்கும்படியான நிலைமையன்றே. ‘இப்படிப்பட்ட காதல் உனக்கு ஆகாது’ என்று சொல்லாமென்று பார்த்தாலோ, அது விஞ்சிக் கிடக்கின்றதே! என்செய்வேன்! என்கிறாள்.
மயற்பெருங்காதல்-மோஹத்தை விளைக்கக்கடவதான பேரன்பு என்றபடி. “வல்வினையேனே” என்றவிடத்து ஈடு; -“இவளை இப்படி காணும்படி மஹாபாபத்தைப் பண்ணினேன். ஆழ்வான் திருநயனங்கள் நோவுபட்ட பின்பு எம்பெருமானார் திருவுள்ளம் நோவுபட்டாப்போலே காணும் திருத்தாயார் திருவுள்ளம்படுகிறது.
English Translation
She swoons, and stares blankly into the distance, and sweats, Tears fall like rain; she sighs hotly and weakly calls “Krishna!”, and “Come, my Lord!”, woe is me, what shall I do? Alas, my daughter is smitten by a maddening love-sickness
