(3272)
விரும்பிப் பகைவரைக் காணில் வியலிடம் உண்டானே என்னும்,
கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணன் என் றேறப் பறக்கும்,
பெரும்புல ஆநிரை காணில் பிரானுளன் என்றுபின் செல்லும்,
அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே.
பதவுரை
| பகவரை |
– |
ஸந்நியாஸிகளை |
| காணில் |
– |
கண்டால் |
| விரும்பி |
– |
ஆதரவு கொண்டு பேணி |
| வியல் இடம் உண்டானே என்னும் |
– |
அகன்ற உலகத்தை ப்ரளயாபத்திலே உண்டு திருவயிற்றிலே வைத்து ரகூஷித்த ஸர்வரக்ஷகனே என்பாள்; |
| கரு பெரு மேகங்கள் காணில் |
– |
கறுத்துப்பெருத்த மேகங்களைக் கண்டால் |
| கண்ணன் என்று |
– |
கண்ணபிரான் என்று நினைத்து |
| ஏற பறக்கும் |
– |
(அங்கே செல்ல) மேலேயெழுந்து பறப்பதற்கு அலமரா நிற்பாள்; |
| பெரு புலம் ஆநிரை காணில் |
– |
பருத்து அழகிய பசுக்களைக் கண்டால் |
| பிரான் |
– |
(அவற்றை மேய்த்து ரகூஷிப்பவனான) உபகாரகன் |
| உளன் என்று |
– |
கூடவருகிறான் என்று நினைத்து |
| பின் செல்லும் |
– |
அப்பசுக்களின் பின்னே போகிறாள் |
| பெறல் அரு பெண்ணினை |
– |
பெறுதற்கு அரியளான இப் பெண்ணை |
| மாயோன் |
– |
எம்பெருமான் |
| அலற்றி |
– |
வாய்விட்டு அலறும்படி பண்ணி |
| அயர்ப்பிக்கின்றாள் |
– |
(அதற்குமேலே) மோஹிக்கும்படி பண்ணுகிறான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பகவர் என்றது பாமைகாந்திகள் என்றபடி. ஜ்ஞானானுஷ்டநன பரிபூர்ணர்களான உத்தமாச்ரமிகள் என்று கொள்க. பகவானைச் சொல்லுகிற சொல்லையிட்டே அவர்களைக் கூறினது-அவர்கள் பகவானில் வேறுபடாதவர்கள் என்பதைக் காட்டுதற்கென்க.
அப்படிப்பட்டவர்களைக் கண்டால், உலகங்களையெல்லாம திருவயிற்றிலே வைத்து நோக்கின பெருமானாகவே பிரதிபத்தி பண்ணுவள். ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் என்கிற பகவத்கீதையிலே நோக்குப்போலும்.
கரும்பெரு மேகங்கள் காணில் = கறுத்துப் பெருத்து விடாய்தீர்க்குமதான மேகத்தைக் கண்டவாறே அப்படிப்பட்ட வடிவையுடையனான கண்ணபிரான் தானே வந்து தோன்றினனாகக்கொண்டு கோலாஹலங்கள் செய்யா நிற்பள். இங்கே ஒரு இதிஹாஸம் ஈட்டில் அருளிச்செய்யப்படுகிறது:-ராஜேந்த்ரசோழன் என்னும் ஊரில் திருவாய்க்குலத்தாழ்வார் என்று ஒருவரிருந்தாராம்; அவர் கார்காலத்திலே பயிர் பார்க்கவென்று புறப்பட்டு வயலருகில் சென்றவாறே மேகத்தைக் கண்டு மோஹித்து விழுந்தாராம்; இவர் விழுந்ததைக் கண்டு நின்ற குடிமகன் ஓடிவந்து அவரை யெடுத்துக்கொண்டு வந்து க்ருஹத்திலேவிட்டு ‘இவருடைய ப்ரக்ருதியை அறிந்திருந்தும் இந்நாளிலே இவரை வயல் பார்க்கப் புறப்படவிடலாமோ? என்றானாம். மேகத்தைக் கண்டு பகவானாவே யெண்ணி மோஹித்த விழுதல்; பக்தர்களுக்கு உள்ளதென்று இதனால் விளங்கிற்று.
பெரும்புலவாநிரை காணில் பிரானுளனென்று பின் செல்லும் = பசுக்கூட்டங்கள் வயல்களிலே மேய்ந்துவிட்டு மாலைப்போதிலே மீண்டு ஊர்க்குள்ளே புகுதல் எங்குமுண்டே; அத்தகைய திரளைக் கண்டால், கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு கலந்து தழைகளுந் தொங்கலும் ததும்பி யெங்குங் தண்ணுமையெக்கம் மத்தளி தாழ்பீலிக் குழல்களுங் கீதமுமாகியெங்குங் கோவிந்தன் வருகின்ற கூட்டமாகவே யெண்ணி, முன்னணியிலே கண்ணனைக் காணாமல் பிற்குழையிலே அவன் எழுந்தருளக் கூடுமென்று கருதிப் பின்னாலே சென்று பார்க்கின்றாள். இப்பசுக்களின் கோஷ்டிக்குள்ளே கண்ணபிரான் இருக்கக் கூடுமென்று நினைத்து, எப்படியும் அவனைக் காண வேணுமென்று கருதி அவற்றைத் தொடர்ந்துகொண்டே செல்லாநின்றாள் என்றுமாம்.
புலம் என்றது இந்திரியங்களை அபஹரிக்குமதான என்றபடி: அழகிய என்பது தேர்ந்தபொருள்.
எப்போதும் தன்னையே வாய் வெருவும்படியாகவும் மோஹிக்கும்படியாகவும் இப்படி எம்பெருமான் செய்துவிட்டானே! என்கிறாள் ஈற்றடியில். ஆழ்வார் இவ்வுலகில் திருவவதரித்தது மிக்க தவப்பயன் என்பது அரும்பெறல் பெண்ணினை என்பதனால் தெரிவிக்கப்பட்டது. “அருவினையேன் நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம் பாவிப்பெற்ற” என்ற திருவித்தமும் இங்கு அநஸந்தேயம்.
English Translation
Seeing saintly men she says eagerly, “Lord who swallowed the Universe!” Seeing dark laden clouds she calls, “Krishna!” and tries to fly, seeing herds of cattle, she says, “The Lord is among them!” and follows. My hard-begotten daughter is afflicted to tears by the Lord
