(3271)

(3271)

திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்,

உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்,

கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும்

வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.

பதவுரை

திரு உடை

பூர்ணமான செல்வத்தையுடைய
மன்னரை காணில்

அரசர்களைக் கண்டால்
திருமாலை

திருமகள் கொழுநனான எம்பெருமானை
கண்டேனே என்னும்

கண்டேனே! என்று கூறுவாள்;
உரு உடை

விலக்ஷண வடிவங்களையுடைய
வண்ணங்கள் காணில்

(காயாம்பூ முதலிய) பதார்த்தங்களைக் கண்டால்
உலகளந்தான் என்று துள்ளும்

(இச்செவியுள்ளது) திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என அத்யவஸித்து ப்ரீதியோடே ஆடுவாள்?
கரு உடை

விக்ரஹயுக்தமான
தேவு இல்கள் எல்லாம்

தேவாலயங்கள் யாவும்
கடல்வண்ணன் கோயிலே என்னும்

எம்பெருமான் (எழுந்தருளியுள்ள) கோவில்களே என்று கூறுவாள்
வெருவிலும் வீழ்விலும்

அஞ்சினபோதும் (ஆர்த்தியாலே) மோஹித்தபோதும்
ஓவா

ஒழியாதவளாகி
கண்ணன் கழல்கள் விரும்பும்

க்ருஷ்ணன் திருவடிகளையே பேணா நின்றாள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- செல்வம் மிக்க அரசர்களைக் கண்டால் திருமாலைக்கண்டதாகவே சொல்லுவளாம்.  ஏனென்னில்; *** விஷ்ணு: ப்ருதிவீபதி:” என்று சாஸ்த்ரம் கூறுகின்றது; விஷ்ணுவின் அம்ஸமில்லாமல் அரசனாக அமைய முடியாததென்பது இந்த ப்ரமாணத்தின் கருத்து.  பூதத்தாழ்வார் தமது திருவந்தாதியில் -“கோவாகி மாநிலங்காத்து நங்கண் முகப்பே, மாவேகிச் செல்கின்ற மன்னவரும்-பூமேவுஞ் செங்கமல நாவியான் சேவடிக்கே யேழ்பிறப்பும், தண்கமல மேய்ந்தார்தமர்.” என்றருளிச்செய்கிறார்.  பலகாலம் பகவானை ஆராதித்து அதன்பலனாகவே அரசர்களாகிச் சீரிய சிங்காசனம் ஏறுகின்றார்களென்கை.

இங்கே சில ஐதிஹ்யங்கள் ஈட்டில் அருளிச் செய்யப்படுகின்றன.  அரசன் ஸாமந்தன் தலையிலே அடியிட்டு ஆனைக்கழுத்திலே ஏறும்போது நாதமுனிவன் கண்டு “ஸர்வேச்வரன் ப்ரஹ்மாதிகள் தலையிலே அடியிட்டுப்  பெரியதிருவடியின் மீது ஏறும்படி இதுவன்றோ” என்று சொல்லி மோஹித்தாராம்.  ஒரு ராஜாவைக்கண்டு அவன்பின்னே தொடாந்து போனார் என்று முண்டு.

உருவுடை வண்ணங்கள் காணில் உலகந்தானென்று துள்ளும் = விலக்ஷணரூபங்களையுடைய பதார்த்தங்களைக்கண்டால் (அதாவது, நீலம் குவளை காயா முதலிய உருவழகிய பொருள்களைக் கண்டால் ‘உலகளந்த என்னாயன்’ என்று சொல்லித் துள்ளுகின்றாள்.

(கருவுடை யித்யாதி.) கல்புதைத்துக் கிடக்கும் ஸ்தானங்களைக்கண்டால் அவையெல்ல்ர்ம் பெரிய பெருமாள் பள்ளிகொண்டருளிகற கோயிலிலே யென்று சொல்லுகின்றாள். எந்த ப்ரதிமையிலும் எம்பெருமானுடைய ஆவேஸம் இருந்தே தீருமென்பது கருத்து.  நாலு பேர் கையெடுத்துக்கும்பிடவேண்டும்படி யிருக்குமிடம் எதுவானாலும் அங்கு எம்பெருமானுடைய ஸாந்நித்யம் உண்டாகியே யிருக்குமென்க.  இங்குக் கடல்வண்ணன் என்றதனால் *** ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்.  ஸர்வதேவநமஸ்கார: கேஸவம் ப்ரதி கச்சதி.”  என்கிற ஸூப்ரஸித்த ச்லோகம் நினைவுக்;கு வருகின்றது.  எந்தத் தண்ணீரும் கடலிலேபோய்ப் புகுமாபோலே எந்தத் தெங்வத்தைப் பற்றின நமஸ்காரமும் கடல்வண்ணனிடத்தே போய்ச் சேருமென்பது மேலெடுத்த வசனத்தின் கருத்து.

வெருவிலும் வீழ்விலும் = வெருவுதலாவது அஞ்சுதல்; வீழ்தலாவது மோஹித்தல். தெளிவோடே கூடியிருந்து பந்துக்களைக்கண்டு அஞ்சி யிருக்கும்போதும், அறிவழிந்து மோஹித்துக் கிடக்கும்போதும் இடைவிடாதே கண்ணன் கழல்களில் விருப்பமே இவளுக்குச் செல்லா நின்றது என்றதாயிற்று.

English Translation

Seeing wealthy nobles, she says, “I have been my Tirumal!” Seeing a shapely rainbow she dances saying, “Vamana measured the Earth!” All temples with icons are her ocean-hued Krishna’s temples.  Through fear and fatigue she seeks his feet, without a break

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top