(3255)

(3255)

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி

ஆகி, ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி,

நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனே,உன்

ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே.

 

பதவுரை

ஏகம்மூர்த்தி

காரணபூதமான ஒரு மூர்த்தியாய்

இரு மூர்த்தி

(ஸ்ருஷ்டியின் தொடக்கத்திலே) ப்ரக்ருதி மஹான்களைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் மூர்த்தியாய்

மூன்று மூர்த்தி

ஸாத்லிகமாயும் ராஜஸமாயும் தாமஸமாயும் மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தை வடிவமாகக் கொண்ட மூர்த்தியாய்

பல மூர்த்தி ஆகி

மநஸ் முதலிய கரணங்களை வடிவாகவுடையனாய்

ஐந்து பூதம் ஆய்

பஞ்ச பூதங்களை வடிவாகவுடையனாய்

இருண்டு சுடர் ஆய்

ஸூர்ய சந்திரர்களிருவரையும் வடிவாகவுடையனாய்

அரு ஆகி

ஸர்வாந்தர்யாமியாய்

நடு கடலுள்

திருப்பாற் கடல் நடுவே

நாகம் ஏறி

திருவனந்தாழ்வான் மீது ஏறி

துயின்ற

திருக்கண்வளர்ந்தருளின

நாராயணனே

நாராயணனே!

உன்

உன்னுடைய

ஆகம்

திருமேனியையும்

முற்றம்

அதற்கு வேண்டிண மற்றெல்லாவற்றையும்

அகத்து

எனது நெஞ்சினுள்ளே

அடக்கி

அடங்கவைத்து

ஆவி

உன் திருவுள்ளம்

அல்லல் மாய்த்ததே

இடர் நீங்கப்பெற்றதே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்த்திருவாய்மொழியில் தமக்குண்டான ஆற்றாமை தீரப்பெற்றமையை இங்கருளிச்செய்கிறார். ஏகமூர்த்தி-ஸ்ருஷ்டிக்கு முன்பு ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்டனாய்க் கொண்டு ஒரே மூர்த்தியாக இருக்குமிருப்பை அருளிச் செய்தபடி.  இருமூர்த்தி  ஸ்ருஷ்டியிலே உந்முகனாய் ப்ரக்ருகதி மஹாந் என்ற இரண்டு தத்துவங்களையும் சரீரமாகக் கொண்டு நிற்கிற நிலையைச் சொன்னபடி.  மூன்றுமூர்த்தி  ஸாத்விகம் ராஜஸம் தாமஸம் என்று மூன்றுவகைப்பட்ட அஹங்காரமென்கிற தத்துவத்தைச் சரீரமாகக்கொண்டு நிற்கும் நிலையைச் சொல்லுகிறது.

பலமூர்த்தியாகி ஐந்துபூதமாய்  ஸாத்விகாஹங்காரத்தின் காரியமான பதினோரிந்திரியங்களையும் தாமஸாஹங்காரத்தின் காரியமான நிலம் நீர் தீ கால் விசும்பு என்கிற பஞ்ச பூதங்களையும் சரீரமாகக் கொண்டிருக்கும்படியைச் சொன்னபடி.

ஏகமூர்த்தி-பரவாஸூதேவமூர்த்தி; இருமூர்த்தி-பரவாஸூதேவன் வ்யூஹ வாஸூதேவன் ஆகிற இரண்டு மூர்த்தி.  மூன்றுமூர்த்தி-ஸங்கர்ஷண அநிருத்த ப்ரத்யும்ந மூர்த்திகள்.  பலமூர்த்தி-“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிற அநேக விபவாவதார மூர்த்திகள் என்றுரைப்பாருமுண்டு.

இரண்டுசுடராய்  ஸூர்ய சந்திரர்களைச் சொல்லுகிறது; இவ்விருவரைச் சொன்னது கார்யவர்க்கங்க ளெல்லாவற்றுக்கும் உபலக்ஷணம்.

அரு ஆசி  ஒவ்வொரு பொருளிலும் அநுப்ரவேசத்திருக்கும்படியைச் சொல்லுகிறது. அரு-அரூபி.

(நாகமேறி யித்யாதி.) ஸ்ருஷ்டிக்கப்பட்ட பிரமன் முதலியோர் வந்து அடிபணிதற்குப் பாங்காகத் திருப்பாற்கடலினிடையே திருவனந்தாழ்வான்மீது சாய்ந்தருளினவனே!

(உன் ஆகமுற்றும் இத்யாதி.)  ஆகம்-உடம்பு; உடம்புக்கு வேண்டியவைகளான சாந்து, பூமாலை, திருப்பரிவட்டம்;, ஆபரணம் ஆகிய இவற்றை (இலக்கணையால்) சொல்லுகிறது.  உன் ஆகம்முற்றும்-உன் திருமேனிக்கு வேண்டியவற்றை யெல்லாம்; அகத்துஅடக்கி-என்னுள்ளே உண்டாம்படி பண்ணி; (அதாவது, கீழிரண்டு பாட்டுக்களிற் கூறியபடியே அமைத்துக்கொண்டு.) ஆவி-உன் ஹ்ருதயத்திலிருந்த, அல்லல்-துயரம், மாய்த்தது-போக்கிக்கொள்ள பெற்றது.

‘என் ஆவி’ என்றாவது ‘உன் ஆவி’ என்றாவது சொல்லாமையாலே இரண்டு வகையாகவுங் கொள்ளப் பொருந்தும்.  இங்கே நம்பிள்ளையீடு;-“உன் திருவுள்ளத்திலுண்டான அல்லல் ஒருபடி நசிக்கப் பெற்றதே!.  இத்தலையை ஒருபடி கரைமாஞ்சேர்த்து நீ க் ரு த க் ரு த் ய னா னா யே.  அன்றிக்கே, என்னாவியானது நிர்த்துக்கமாயிற்று என்றுமாம்.

 

English Translation

O Narayana!  You become the one, the Two, the Three, and the Many, then the five elements, the twin orbs, and all the souls.  Then you mounted a serpent and slept in the ocean!  By filling your presence into my body my soul has overcome its misery.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top