(3256)

(3256)

மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்

மாய்த்த, ஆய மாயனே. வாமனனே மாதவா,

பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்

பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.

 

பதவுரை

மாய்த்தல் எண்ணி

முடிப்பதாக நினைத்து

வாய்

வாயிலே

முலை தந்த

நஞ்சு தீற்றிய முலையை வைத்த

மாயம் பேய்

பூதனையினுடைய

உயிர்

பிராணனை

மாய்த்த

முடித்துவிட்ட

ஆய! மாயனே!

வாமனனே! மாதவா!

உன்னை

உன்னை

பூ தண் மாலை கொண்டு

பூக்கள் தொடுத்துக் குளிர்ந்த மாலைகளைக் கொண்டு

போது

அவ்வப்போதுகளில்

வணங்கேன் ஏலும்

வழிபாடு செய்யப்பெற்றிலேனாகிலும்

நின்

உன்னுடைய

பூ தண் மாலை நெடு முடிக்கு

புஷ்பமயமாய்ச் செவ்விய மாலையாலே அலங்கரிக்கப்பட்ட நீண்ட திருமுடிக்கு

புனையும் கண்ணி

அலங்காரமாய்ச் சாத்துகின்ற மாலை

எனது உயிரே

என் பிராணனாவதே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பூதனையை முடித்தல் முதலான ஸமயங்களில் விடாய்தீர வந்துநின்று சிசிரோபசாரம் பண்ணப்பேற்றீலேனே யாகிலும் உன் திருமேனிக்கு என்னுயிரே உபகாரமாய்விட்டதே யென்கிறார்.  கம்ஸன், தன்னைக் கொல்லபிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களின் ஒருத்தியான பூதனையென்னும்; ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் துர்ங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ க்ருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி, அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கிவிழுந்து இறக்கும்படி செய்தனன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.

“மாய்த்தலெண்ணி” என்றவிடத்து ‘இன்னாரை மாய்த்தல்” என்று விரியச் சொல்லாமையாலே ‘உலகத்தையே மாய்க்கவெண்ணி’ என்றும் பொருள் கொள்ளலாம்.  ஸகல ஜகச்சரீரியான கண்ணனை நலிய நினைத்தது உலகத்தையே உபஸம்ஹாரம் பண்ண நினைத்தபடி யாகுமன்றோ. அவள் பேயாய் வருகையன்றியே தாயாய் வந்ததனால் ‘மாயப் பேய்’ எனப்பட்டது.

வாமனனே!  க்ருஷ்ணாவதாரத்தில் பூதனை முலைகொடுத்தபோது அதற்கு மாற்ற மருந்தாக முலை கொடுக்கைக்கு ஒரு தாயாகிலுமிருந்தாள்; “வெங்கொங்கையுண்டானை மீட்டாய்ச்சி  யூட்டுவான் தன் கொங்கை வாய்வைத்தான் சார்ந்து” என்றும் ‘பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாதே” என்றும் பேயாழ்வார் அருளிச்செய்து வைத்தாரே.  அதுவுமில்லாதபடி, வாமனனைப் பெற்றிட்டு வைத்துத் தாயும் தமப்பனும் தபஸ்ஸிலே அந்யபரராயிருக்க, ஆஸூரப்ரக்ருதி (மஹாபலி) யிருந்தவிடத்தே தானே சென்ற கிட்டும்படியாயிற்றே; அக்காலத்திலே தாம் உடனிருந்து உபசாரம் செய்யப் பெறாமைக்கு உறாவுகிறபடி.

மாதவா!  லக்ஷ்மீ வல்லபனே! என்றபடி.  “தீநாள் திருவுடையார்க்கில்லை” என்று ஒரு பழமொழியுண்டு; செல்வமுடையார்க்கு ஆபத்து ஒன்றும் வாராது என்றவாறு.  கீழ்ச்சொன்ன அபாயங்களில் எம்பெருமான் தப்பிப்பிழைத்து பிராட்டியின் கடாக்ஷத்தினா லென்கிறார் போலும்;

ஆப்ரய சைசவமநாரதமப்ரயத்நாத் யத்பூதநாதிவிபதுத்தரணம் முராரே:

கல்யாணி ருக்மிணி ஜகஜ்ஜநநி த்வதீய மாங்கள்யஸூத்ரமஹிமா கலு தத்ர ஹேது:

என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்க வுரியது.  லக்ஷ்மீகடாக்ஷமிருக்கும்போது அபாயம் புகுர ப்ரஸக்தியில்லையாகிலும் இருவருமான சேர்த்திக்கு மங்களா சாஸனம் பண்ண ப்ராப்தியுண்டே; “வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” என்னவேண்டுமே; அது தவறின குறையை நினைக்கிறாரென்னலாம்.  பாற்கடல் கடைந்த காலத்தில் பிராட்டி திருமார்பிலே வந்து சேரும்போதும், வாமனனாய் மாவலிபக்கல் எழுந்தருளினபோதும், பேய்ச்சி முலை சுவைத்தபோதும் உடனிருந்து உபசாரம் பெற்றிலேனாகிலும், உன்னுடைய திருமுடிக்கு அலங்காரமாகச் சாந்தும் மாலை என்னுடைய ப்ராணனாவதே! என்கிறார்.  தம்முடைய ஸத்தையையே இங்கு ப்ராணனாகச் சொல்லுகிறபடி.

 

English Translation

O Chief of the cowherd clant O Madava! O Vamana! Killer of the poison-breasted ogress putana, I do not worship you thrice a day with fresh flower garlands, my life is a wreath worthy of being wrapped on your crown

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top