(3025)
யவரும்யாவையு மெல்லாப்பொருளும்,
கவர்வின்றித் தன்னுளொடுங்கநின்ற,
பவர்க்கொள்ஞான வெள்ளச்சுடர்மூர்த்தி,
அவரெம் ஆழியம் பள்ளியாரே.
பதவுரை
|
யவரும் |
– |
சேதனர்கள் யாவரும் |
|
யாவையும் |
||
|
அசேதனங்கள் யாவையும் |
||
|
எல்லாப் பொருளும் |
– |
ஆகிய எல்லாப் பொருள்களும் |
|
கவர்வு இன்றி |
– |
நெருக்கமின்றியே |
|
தன்னுள் |
– |
தனது திருவயிற்றினுள்ளே |
|
ஒடுங்க நின்ற |
– |
அடங்கும்படி நின்றவனும் |
|
பவர் கொள் |
– |
பரப்பைப்கொண்ட |
|
ஞானம் வெள்ளம் |
– |
ஞானமிகுதியை |
|
சுடர் |
– |
தனக்குக் காந்தியாகவுடைய |
|
மூர்த்தி |
– |
ஸ்வாமியுமான |
|
அவர் |
– |
அந்த ஸர்வேச்வரன் |
|
எம் |
– |
எமது அநுபவத்திற்குரிய |
|
அம் |
– |
அழகிய |
|
ஆழிபள்ளியார் |
– |
ப்ரளயார்ணவசயணராவர் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சேதநாசேநாத்மகமான ஸகல பதார்த்தங்களையும் தன் திருவயிற்ளிலே வைத்து ரக்ஷரிக்கையாலே அவனே ஈச்சரனென்கிறார். யவரும் என்று உயர்திணையாகச் சொல்லுகையாலே சேதநப் பொருள்களடங்கிலும் அர்த்தம். ‘யாவையும் என்று அஃறிணையாகச் சொல்லுகையாலே அசேதநப்பொருள்களடங்கலும் அர்த்தம். மீண்டும் ‘எல்லாப்பொருளும்’ என்றது பிரளயகாலத்தில் திருவயிற்றினுட புகாது நின்ற பொருள் அணுவளவும் இல்லையென்பதைத் திடமாகவுடைத்தற்கரம். கவர்வு இன்றி = பரஸ்பரம் ஹிம்ஸை ஏற்படாதபடி என்றவாறு ஒருவரையொருவர் நெருக்காதபடி விசாரமாகத் திருவயிறு இடங்கொடுத்ததென்க.
“தன்னுள் ஒடுங்கநின்று” என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்வர்; திருவயிற்றினுள்ளே என்பது ஒரு பொருள். தன் ஸங்கல்பத்திலே என்பது மற்றொரு பொருள். ஸகல சராசரங்களும் எம்பெருமானுடைய ஸங்கல்பத்திலே ஒடுங்கி நிற்கின்றன வென்றபடி.
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி = இத்தனை விசாலமான உலகங்களையெல்லாம் ரக்ஷரிப்பதற்குப் போதுமான பரப்பையுடைய ஜ்ஞாத ப்ரவாஹம் நிரம்பியவனாய் ‘இப்படி ரக்ஷரிக்கப் பெற்றது தன்பேறு’ என்று தோற்றும்படியிருக்கிற சுடரேவடிவெடுத்த திவ்யமங்கள விக்ரஹத்தை யுடையனானவன்.
ஆழியம்பள்ளியார் = திருப்பாற்கடலிற் கிடந்த கிடையைச் சொல்லவுமாம் ப்ரளயார்ணவத்திலே ஆபத்ஸகனாய்க் கண்வளர்ந்தபடியைச் சொல்லவுமாம்.
English Translation
All things, all beings and all the worlds, -he contains them within him easily. He is an icon of eternal effulgence reclining in the ocean, He alone in my Lord!
