(3026)

(3026)

பள்ளியாலிலை யேழுலகும்கொள்ளும்,

வள்ளல் வல்வயிற்றுப்பெருமான்,

உள்ளுளா ரறிவார் அவன்றன்,

கள்ளமாய மனக்கருத்தே.

 

பதவுரை

பள்ளி

படுக்கை

ஆல் இலை

ஆலந்தளிராக

ஏழ் உலகும்

ஏழுலகங்களையும்

கொள்ளும்

கொள்ளக்கடவதான

வல்

உறுதியான

வயிறு

திருவயிற்றையுடையனான

பெருமான்

பெரியோனாகிய

அவன் தன்

அந்த ஸ்ரீமந்நாராயணனுடைய

கள்ளம்

ஒருவராலுமறியக்கூடாததான

மாயம்

ஆச்சரீரயமான

மனம் கருத்து

திருவுள்ளக்கருத்தை

உள்ளுள்

மனத்தினால்

அறிவார்ஆர்

அறியவல்லவர் யாவர்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸகல லோகங்களுக்கும் ஆபத்திலே  இடங்கொடுக்கையாகிற சிறந்த ஔதார்யத்தையடையனாய்,  ஸகல லோகத்தையம் திருவயிற்றிலே வைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளும்படியான அகடிதகடநா ஸாமாத்தியத்தையுடையனான ஸர்வேச்வரனுடைய திவ்ய சேஷ்டிதங்களை ஆர்அறிய வல்லார்?  என்னும் முகத்தாலே, இப்படிப்பட்ட அகடிதகடநா ஸமர்த்தனுக்கே ஸர்வேச்வரத்வம் தகும் என்கிறாராயிற்று.

 

English Translation

My Lord has a great strong belly. He ate the seven worlds and slept on a fig leaf. We can understand the mysteries of his dark unfathomable will?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top