(3024)

(3024)

தகும்சீர்த் தன்தனிமுதலினுள்ளே,

மிகும்தேவு மெப்பொருளும்படைக்க,

தகும்கோலத் தாமரைக்கண்ணனெம்மான்,

மிகும்சோதி மேலறிவார்யவரே.

 

பதவுரை

தகும்

தகும்

(ஸ்ருஷ்டி முதலியவற்றுக்குத்) தகுதியான

சீர்

(சிறந்த ஞானம் முதலிய ) குணங்களையுடையனான

தன்

தன்னுடைய

தனி

ஒப்பற்ற

முதலினுள்ளே

உலககாரணமான ஸங்கல்பத்திற்குள்ளே

மிகும்

மிகுந்த

தேவும்

(பிரமன் முதலிய) தேவர்களையும்

எப்பொருளும்

(மணிசர் முதலிய) மற்றெல்லாப் பொருள்களையும்

படைக்க

படைப்பதற்கு

தகும்

தகுதி பொருந்தியவனும்

கோலம் தாமரை கண்ணன்

அழகிய புண்டாரிகாக்ஷனுமாகிய

எம்மான்

எம்பெருமானைவிட

மிகும்சோதி

மிகுந்த ஒளி பொருந்திய

மேல்

மேலான பொருளை

அறிவார்யவர்

அறிபவர் யாவர்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுக்குப் பரத்வஸ்தாபங்களானவற்றுக்குள்ளே புண்டாரிகாக்ஷத்வமும் ஒன்றாதலால் அதனை இங்கு அருளிச்செய்கிறார்.  ஆளவந்தாரும் ஸ்கோத்ரரத்நத்தில் ஸ்ரீமந்நாராயணனுடைய பரத்வத்தை நிரூபிக்கும் பிரகரணத்திலே க  புண்டாரிகநயந: புருஷோத்தம: க: * என்றருளிச் செய்தது காண்க.

தனக்குத் தகுதியான ஜ்ஞாநசக்தி முதலிய திருக்குணங்களை யுடையனாய்த் தன்னுடைய ஸங்கல்ப மாத்திரத்தினாலே எப்படிப்பட்ட தேவர்களையும் படைக்க இவனே தகதியுடையானென்று கோட்சொல்லித் தருகின்ற தண்டாமரைக் கண்களையுடையனாய் அவ்வழகாலே என்னை; அடிமை கொண்டருளின எம்பெருமானே பரதத்துவம் இவன் தவிர வேறு சில ஈச்வரர்கள் உண்டென்பதற்கு ப்ரமாணமில்லை என்றாராயிற்று.

 

English Translation

My Lord of befitting wealth and lotus eyes by his own cause did create the exalted gods and all things and beings. Who can praise a Lord of greater glory?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top